டீ பிரியர்களுக்கு விருப்பமான டீ வகைகளில் சில எடை குறைப்புக்கு உதவுகிறது என்றால் நம்பமுடிகிறதா?
By Muthu Vinayagam Kosalairaman Apr 02, 2023
Hindustan Times Tamil
கிரீன் டீ
எடை குறைப்பு என்று பேச்சு எடுத்தாலே கிரீன் டீ தவறாமல் இடம்பெறும். இதிலுள்ள கேட்சின்ஸ் என்ற பிளேவனாய்டுகள் கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்க உதவுகிறது
ஒயிட் டீ
குறைவாக பதப்படுத்தப்பட்ட டீ வகைதான் ஒயிட் டீ. உடலிலுள்ள கொழுப்பை குறைத்து புதிதாக கொழுப்பு செல்கள் உருவாவதை தடுத்து எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது
ஊலாங் டீ
இந்த டீ வகையில் கேட்சின்ஸ் அதிகம் இருப்பதால் எடை குறைப்புக்கு உதவுகிறது. கூடுதல் எடை, வயிற்று பகுதி கொழுப்பை குறைக்கும் வல்லமை கொண்டுள்ளது
பிளாக் டீ
உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்கள் உடலில் சேருவதை தடுக்கிறது
செம்பருத்தி டீ
கிரீன் டீ பிடிக்காதவர்கள் செம்பருத்தி டீ பருகலாம். இந்த பூவில் உள்ள ரசாயனம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கொழுப்பு வளர்சிதை மாற்ற மரபணுக்களை கட்டுப்படுத்துகிறது
உடற்பயிற்சியே இல்லாமல் வயிற்றில் கொழுப்பை கரைப்பது எப்படி?