காலபுருஷனின் 11ஆவது வீடான கும்பம் ராசிக்கு சனி பகவான் அதிபதி ஆவார். அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்கள் கும்பம் ராசியில் அடங்குகின்றது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் பண பிரச்னை, ஆரோக்கிய பாதிப்பு, குழந்தைகளுக்கு பாதிப்பு, உறவுகளுக்குள் சிக்கல்கள், வேலை இழப்பு, அவமானம், தடங்கள்களை சந்தித்து இருப்பீர்கள். ஜென்ம சனி பாதிப்பில் உள்ள கும்ப ராசிக்கு விடிவுகாலம் பிறக்கும் காலம் நெருங்கிவிட்டது.
சனி பெயர்ச்சிக்கு பிறகு புத்துணர்வும், தைரியமும் கிடைக்கும். மனதில் தெளிவு கிடைக்கும். பணம் தொடர்பான பிரச்னைகள் விலகும். பிரிந்த கணவன் - மனைவி உறவு ஒன்று சேரும், சொத்து தொடர்பான வில்லங்கம் மற்றும் வழக்குகள் முடிவுக்கு வரும், உங்களை விட்டு பிரிந்து என்ற உறவுகள் மீண்டும் ஒன்று சேருவார்கள், ங்கள் எதிரிகள் உங்கள் எழுர்ச்சியை கண்டு அஞ்சுவார்கள், வேலை மாற்றங்களால் அனுகூலம் கிடைக்கும்,
இரண்டாம் வீட்டுக்கு சனி பகவான் செல்வதால் தனம், வாக்கு, குடும்ப விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பணம் தொடர்பான விவகாரங்களில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப உறவுகளிடம் பொறுமையாக பேச வேண்டும். பேச்சில் கவனமும், நிதானமும் தேவை. பேச்சுவார்த்தைகளின் போது அமைதி காப்பது நலம். தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுத்தால் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்.
ராசிக்கு இரண்டாம் வீட்டுக்கு செல்லும் சனி பகவான் 3ஆம் பார்வையாக 5ஆம் இடத்தை பார்ப்பதால் உங்கள் குழந்தைகள் மூலம் சில பிரச்னைகள் வரலாம்.
7ஆம் பார்வையாக 8ஆம் இடத்தை சனி பார்ப்பதால் தேவை இல்லாத உடல் உபாதைகள், சிறு விபத்துக்கள் உண்டாகலாம் என்பதால் எச்சரிக்கை தேவை.
10ஆம் பார்வையாக 11ஆம் இடமான தனுசு ராசியை சனி பகவான் பார்ப்பதால் தொழிலிலும், பணியிடத்திலும் தடை தாமதங்கள் உண்டாகும். பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் தாமதம் ஆகும்.
கலகலனெ சிரி கண்ணில் நீர் வர சிரி, நீங்கள் சிரித்து மகிழ இங்கே சில ஜோக்குகள்!