மூளையில் கட்டி இருப்பதை அல்லது வளர்வதை உணர்த்தும் அறிகுறிகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jul 19, 2024

Hindustan Times
Tamil

மூளையில் இயற்கைக்கு மாறாக செல்கள் வளர்வதால் மூளை கட்டி பாதிப்பு ஏற்படுகிறது. இது தீங்கற்றதாகவோ அல்லது  வீரியம் மிக்கதாகவோ இருக்கலாம்

தலைவலி

தொடர்ச்சியான அல்லது கடுமையான தலைவலி ஏற்படுவது, குறிப்பாக காலையிலும், உடல் ரீதியான செயல்பாட்டை வெளிப்படுத்தும் போதிலும் நிகழ்ந்த மூளையில் கட்டி உருவவாதற்கான ஆரம்ப அறிகுறிகளாகும். வலிநிவாரணி எடுத்துக்கொண்டாலும் இந்த தலைவலி குறையாமல் போகலாம்

உடல் செயல்பாட்டு திறன்களில் குறைபாடு

மூளையில் உடல் ரீதியான செயல்பாட்டை கட்டுப்படுத்தும் பகுதிகளுக்கு உள்ளே அல்லது அதன் அருகாமையில் கட்டி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக பலவீனம், சோர்வு, உடல் ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலையில் கடினம் போன்றவை ஏற்படலாம். உடல் உறுப்புகள் அல்லது ஒரு பகுதி முழுவதும் உணர்வின்மை ஏற்படலாம்

வலிப்புத்தாக்கம்

மூளையில் கட்டுப்பாடு இல்லாத தற்காலிக வலிப்பு தன்மை ஏற்படலாம். தசை விறைப்பு அல்லது இழுப்பு, தீவிர உணர்ச்சி, மாயத்தோற்றம், கட்டுப்பாடற்ற சிரிப்பு அல்லது அழுகை ஏற்படலாம். வலிப்புதன்மை ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்

அறிவாற்றல் செயலில் மாற்றங்கள்

மூளையில் உருவாகும் கட்டி நினைவாற்றல், புத்தி கூர்மை, தெளிவாகி சிந்திக்கும் திறனை பாதிக்கும். குழப்பம், வார்த்தகளை கண்டறிவதில் சிரமம், ஆளுமை மற்றும் நடத்தை மாற்றங்கள் ஏற்படலாம்

பேசுவதில் சிரமம்

பேச்சில் பாதிப்பை ஏற்படுத்தும் மூளை கட்டி புரிதலிலும்ஸ, வாசிப்பிலும், எழுதுவதிலும் சிரமத்தை உண்டாக்கும்

குமட்டல் மற்றும் வாந்தி

உடல்நிலை சரியில்லாமல் போவது, குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். காலை நேரத்தில் இந்த பாதிப்புகள் வரலாம். இதன் விளைவாக மூளை பகுதியில் அழுத்தம் உண்டாகும்

பார்வைதிறனில் பிரச்னை

மூளை கட்டி உருவாவதற்கு பொதுவான அறிகுறிகளில் ஒன்றாக கண்கள் ஆரோக்கியம், பார்வைதிறனில் பிரச்னை ஏற்படலாம். மூளையில் கட்டி வளர்ந்தால் மங்களான பார்வை, இரட்டை பார்வை, பார்வைதிறனில் பாதிப்பு ஆகியவை ஏற்படும்

World Saree Day: உலக சேலைகள் தினம் இன்று! காஞ்சி முதல் காசி வரை! சேலைகள் சொல்லும் சேதி…!