World Saree Day: உலக சேலைகள் தினம் இன்று! காஞ்சி முதல் காசி வரை! சேலைகள் சொல்லும் சேதி…!
By Kathiravan V Dec 21, 2024
Hindustan Times Tamil
ஆண்டுதோறும் டிசம்பர் 21 தேதி அன்று உலக சேலை தினம் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் சேலைகளின் சிறப்புகளை உலகிற்கு சொல்ல இந்த நாள் பயன்படுகின்றது. நேர்த்தியான புடவைகளை வடிவமைக்கும் நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களை கௌரவிப்பதற்காக இந்த நாள் ஆனது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சிந்தூர கவிதி மற்றும் நிஸ்துலா ஹெப்பர் ஆகியோர் சேலை தின கொண்டாட்டத்திற்கு முன்னெடுப்புகளை எடுத்தனர். இந்த செயல்பாடுகள் அது விரைவில் தேசிய அங்கீகாரம் பெற்றது.
2009ஆம் ஆண்டு நளினி சேகர் புடவைகளுக்கு புத்துயிர் அளிக்கவும், புடவையின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் விரும்பி இந்த தின கொண்டாட்டத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் 2020 ஆண்டு தொடங்கி இந்த தினம் இணைய தளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.
புடவையின் வரலாறு சிந்து நாகரிகத்திற்கு முந்தையது என்று கூறப்படுகிறது. அதாவது கிமு 2,800 முதல் 1800 வரையிலான வரலாற்றைக் கொண்டது சேலை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றாக உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் புடவைகளின் பயன்பாடு உள்ளது.
"பட்டுகளின் ராணி" என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் புடவைகள் அவற்றின் நீடித்த தன்மை, துடிப்பான வண்ணங்கள் மற்றும் தூய மல்பெரி பட்டு மற்றும் தங்க ஜரிகை நூல்களால் செய்யப்பட்ட வேலைப்பாடுகளுக்காக புகழ் பெற்று விளங்குகின்றது.
வாரணாசியில் தயாராகும் பனாரஸ் சேலைகள் பூக்கள், இலைகள் உள்ளிட்ட வேலைப்பாடுகள் நிறைந்த டிசைன்களுக்கு புகழ்பெற்றவை. சிக்கலான ப்ரோகேட் வடிவங்களுக்காக இவை புகழ்பெற்று விளங்குகின்றது.
இந்த இரட்டை இகாட் புடவைகள் அவற்றின் சிக்கலான நெசவு நுட்பம் மற்றும் தெளிவான வடிவியல் வடிவங்களுக்காக புகழ் பெற்று விளங்குகின்றன
இலகுரக மற்றும் நேர்த்தியான, சாந்தேரி புடவைகள் அதன் மயில்கள், நாணயங்கள் போன்ற பாரம்பரிய வடிவங்களால் புகழ்பெற்றவை. பட்டு மற்றும் பருத்தி ஆகிய நூல்களிலும் இங்கு புடவைகள் நெய்யப்படுகின்றன.
உங்களுக்கு குழந்தை பிறக்கப்போகிறதா? வாழ்த்துக்கள். ஆனால் அதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?