சீமை சுரைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jul 20, 2024
Hindustan Times Tamil
ஊட்டச்சத்து மிகுந்த காய்கறியாக இருக்கும் சீமை சுரைக்காயில் வைட்டமின்கள் சி, கே, பி6 போன்றவையும் தாதுக்களான பொட்டாசியம், மாங்கனீசு, போலேட் ஆகியவை நிறைந்துள்ளன
குறைவான கலோரிகள்
எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்களுக்கு சிறந்த சாய்ஸாக சீமை சுரைக்காய் உள்ளது. குறைவான கலோரி, அதிகப்படியான நீர் சத்து வயிறு நிரம்பிய உணர்வை நீண்ட நேரம் தருவதோடு, நீரேற்றமாக வைக்கவும் உதவுகிறது
அதிகப்படியான நார்ச்சத்து
டயட்ரி நார்ச்சத்து மிகுந்து காணப்படுவதால் குடல் இயக்கத்தை உருவாக்கி மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. ரத்த சர்க்கரை அளவை சீராக்கி இதய நோய் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பண்புகள்
இதில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, பீட்டா கரோடீன் இருப்பதால் ப்ரீ ரேடிகல்கள் காரணமாக செல்கள் சேதம் அடைவதை தடுக்கிறது. இதன் மூலம் நாள்பட்ட நோய் பாதிப்பு, புற்றுநோய் ஆபத்துகளை குறைக்கிறது
இதயத்துக்கு நல்லது
சீமை சுரைக்காயில் இடம்பிடித்திருக்கும் பொட்டாசியம், மெக்னீசியம் இதய ஆரோக்கியத்துக்கு நன்மை தருகிறது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. மெக்னீசியம் இதய, தசை செயல்பாட்டுக்கு ஆதரவு தருகிறது
கண்கள் ஆரோக்கியத்துக்கு நன்மை
வைட்டமின் ஏ, லூடீன் நிறைந்திருப்பதால் கண்கள் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. வயது தொடர்பாக கண்களில் ஏற்படும் பிரச்னைகளை தடுக்கிறது