கர்நாடக வேலை கன்னடர்களுக்கே! மசோதாவை நிறுத்தி வைத்த சித்தராமையா! நடந்தது என்ன? இதோ முழுவிவரம்!
By Kathiravan V Jul 17, 2024
Hindustan Times Tamil
கர்நாடகாவில் தனியார் துறைகளில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறுத்தி வைப்பதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தனியார் துறையை சேர்ந்த நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான வரைவு மசோதா இன்னும் தயாரிப்பு நிலையில் உள்ளது. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறி உள்ளார். (HT_PRINT)
கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு நிர்வாகப் பதவிகளில் 50 சதவீதமும், நிர்வாகம் அல்லாத பதவிகளுக்கு 75 சதவீத இடஒதுக்கீட்டையும் அமல்படுத்தும் மசோதாவை அம்மாநில அரசு கொண்டு வந்து உள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் சாஃப்ட்வேர் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் கூட்டமைப்பான ’நாஸ்காம்’ இந்த இடஒதுக்கீட்டு மசோதாவை திரும்பப் பெறுமாறு மாநில அரசை வலியுறுத்தி இருந்தது.
மசோதாவின் விதிகள் இந்த முன்னேற்றத்தை மாற்றவும், நிறுவனங்களை விரட்டவும் மற்றும் ஸ்டார்ட்அப்களை முடக்கவும் அச்சுறுத்துகின்றன, குறிப்பாக அதிக உலகளாவிய நிறுவனங்கள் (GCCs) எதிர்பார்க்கும் போது. அதே நேரத்தில், உள்ளூர் திறமைகள் பற்றாக்குறையாக இருப்பதால், கட்டுப்பாடுகள் நிறுவனங்களை இடமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தலாம் என நாஸ்காம் கூறியது.
உள்ளூர் திறமைகள் பற்றாக்குறையாக இருப்பதால், கட்டுப்பாடுகள் நிறுவனங்களை இடமாற்றம் செய்ய நிர்பந்திக்கக்கூடும் என நாஸ்காம் கூறிய நிலையில் ஆந்திர அமைச்சர் நர லோகேஷ், ‘ஐடி நிறுவனங்கள் ஆந்திராவுக்கு வர வேண்டும்’ என அழைப்புவிடுத்து இருந்தார்.
முன்னதாக இது தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள கர்நாடக துணை முதல்வர் .கே.சிவக்குமார், தொழில்துறையினரின் அச்சத்தை போக்க, அரசு மேலும் பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறி இருந்தார். (PTI)
கொத்தமல்லி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இதோ!