’உங்கள் முன் ஜென்மத்தை சொல்லும் 5ஆம் இட ரகசியங்கள்' ஜோதிடம் அறிவோம்!
By Kathiravan V Dec 15, 2024
Hindustan Times Tamil
ஐந்தாம் இடம் என்று சொல்லக்கூடிய பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆனது முன்னோர்கள், குலதெய்வம், வாரிசுகள், ரகசியங்கள், காதல், சொத்துக்கள், வம்ச விருத்தி ஆகியவற்றை குறிக்கும் இடமாக உள்ளது. ஜாதகர் செய்த பாவ புண்ணியங்களை தீர்மானிக்கும் இடம் இதுதான்.
திரிகோண ஸ்தானங்களில் முதல் திரிகோணமாக லக்னமும், இரண்டாவது திரிகோணமாக 5ஆம் இடமும், மூன்றாவது திரிகோணமாக 9ஆம் இடமும் உள்ளது. இந்த 3 திரிகோண அதிபதிகளும் ஒரு ஜாதகத்தில் கெட்டு போகாமல் இருந்தாலே ஜாதகர் அதிஷ்டசாலியாக இருப்பார்.
ஒரு மனிதனுக்கு தனது வாழ்கை துணை மூலம் கிடைக்கும் லாபம், மேன்மை ஆகியவற்றை குறிக்கின்றது. 2ஆம் இடமாகிய குடும்ப ஸ்தானத்திற்கு 5ஆம் இடம் சொத்துக்கள் ஸ்தானமாக விளங்குகின்றது.
3ஆம் இடமான தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு 5ஆம் இடம் செயல் திறன் ஸ்தானமாகவும், 4ஆம் இடமாக சுக ஸ்தானத்திற்கு தன ஸ்தானமாகவும், 6ஆம் இடமான கடன் ஸ்தானத்திற்கு விரைய ஸ்தானமாகவும், 7 ஆம் இடமான வாழ்கை துணை ஸ்தானத்திற்கு லாப ஸ்தானமாகவும், 8ஆம் இடமான ஆயுள் ஸ்தானத்திற்கு தசம ஸ்தானமாகவும், 9ஆம் இடமாக பாக்கிய ஸ்தானத்திற்கு பாக்கிய ஸ்தானமாகவும் இது விளங்குகின்றது.
பொதுவாக 5 மற்றும் 9ஆம் இடங்கள் வலுத்தவர்களுக்கு பிறருக்கு கீழ் பணி செய்வது, அடிமைத் தொழில் செய்வதில் பெரிய ஈடுபாடு இருக்காது.
ஒருவரது மந்திரம், சக்தி, செயல்திறன், கணிக்கும் திறமை, யூகிக்கும் ஆற்றல், பங்குச்சந்தை ஆதாயம், சூதாட்டம், கேளிக்கை ஆகியவற்றை 5ஆம் இடம் குறிக்கின்றது. ஒருவரது ஜாதகத்தில் 5ஆம் அதிபதி சிறப்பாக இருந்தாலே ஜாதகரின் வாழ்கை மத்திம வயதிற்கு மேல் சுகமான பலன்களை கொடுக்கும்.
5ஆம் இடத்தில் சூரியன் அமர்தால் நன்மையும், கெடுதல்களும் சேர்ந்து கிடைக்கும். அறிவாற்றல், யூகிக்கும் திறன், பூர்வீக சொத்துக்கள் மூலம் பலன், சூதாட்ட ஆர்வம் உள்ளிட்ட பலன்களை கொடுக்கும்.
5ஆம் இடத்தில் சந்திரன் இருந்தால் நன்மைகள் கிடைக்கும். வளர்பிறை சந்திரனால் மேன்மை தரும் வாரிசுகள், பெண் தெய்வ அனுகிரகங்கள் கிடைக்கும். குழந்தைகள் பிறந்த பிறகு மண், மனைகள் வாங்கும் நிலை ஏற்படும்.
பும்ரா 3வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 2 நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை அள்ளினார்