மேஷம் முதல் மீனம் வரை! ’உங்களுக்கு ஆயுள் கெட்டியாக உள்ளதா?’ வாழ்நாளை சொல்லும் 8ஆம் இட ரகசியங்கள்
By Kathiravan V Dec 22, 2024
Hindustan Times Tamil
ஜாதகத்தில் துர்ஸ்தானங்கள் என்று 6, 8, 12 ஆகிய இடங்கள் உள்ளன. இதில் 6 மற்றும் 8 ஆகிய வீடுகளே வாழ்வா, சாவா என்பதை தீர்மானிக்கின்றன.
ஆயுள், திடீர் அதிர்ஷ்டம், தன வரவு, உயரத்தில் இருந்து கீழே விழுவது, அவமானம், செய்யாத குற்றத்திற்கு பழி, சிறை தண்டனை, சிறைவாசம், தலைமறைவு வாழ்கை, திடீர் மறைவு, காணாமல் போவது உள்ளிட்டவைகளை குறிக்கும் இடமாக 8ஆம் இடம் உள்ளது.
அதே சமயம் 8ஆம் இடம் வலுப்பெறும் போதுதான் ஆயுள் பலம் கூடும். 8ஆம் அதிபதி 8ஆம் இடத்தில் ஆட்சியில் இருந்தாலே ஆயுள் தீர்க்கமாக இருக்கும்.
நீண்ட ஆயுள், கஷ்டம், ஸ்தான நாசம், விபத்து கண்டங்கள், திடீர் அதிஷ்டம், வாழ்கை துணையின் தனம், வெளிநாட்டு வாழ்கை, தலைமறைவு வாழ்கை, இடமாற்றம், சிறை தண்டனை, வீண் பழி, சுய முயற்சி, பங்குச்சந்தை ஆதாயம், திடீர் தனவரவு ஆகியவற்றை குறிக்கும் அதிபதியாக 8ஆம் அதிபதி உள்ளார்.
பாவக் கோள்கள் 8ஆம் இடத்தில் வலுப்பெற்றால் வாழ்கையில் துன்பங்கள் ஏற்படும், சுபக் கோள்கள் 8ஆம் இடத்தில் வலுப்பெற்றால் வெளிநாடு பயணம், தனவரவு, முன்னேற்றங்களும் உண்டாகும்.
சூரியன் 8ஆம் இடத்தில் பகை பெற்றால் தன்னம்பிக்கை இழப்பு ஏற்படும். சூரியன் மறைந்தால் தந்தையால் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காது. அரசு ஆதரவு கிடைக்காது. சூரியன் ஆட்சி, உச்சம் பெற்றால் நன்மைகள் கிடைக்கும். சந்திரன் 8ஆம் வீட்டில் இருந்தால் தனவரவு, முன்னேற்றம் உண்டாகும். அதே வேளையில் தாய் உடனான உறவில் பிரச்னைகள் ஏற்படும்.
செவ்வாய் 8ஆம் வீட்டில் இருந்தால் தோஷங்களை உண்டாக்கும். விபத்து, கண்டம், உடல் உறுப்புகள் இழப்பு, பேராசையல் சிக்கல்கள் உண்டாகும். ஆனால் ஆட்சி, உச்சம் பெற்றால் பலன்கள் மாறுபடும். புதன் 8ஆம் இடத்தில் இருந்தால் மறைந்த புதன் நிறைந்த கல்வியும், நிறைந்த தனமும் கொடுப்பார். கல்வியால் ஆதாயம், வெளிநாட்டு வாழ்கை, பங்குச்சந்தை ஆதாயம் உண்டாகும்.
குரு பகவான் 8ஆம் இடத்தில் இருந்தால் லக்னத்தின் முன் மற்றும் பின் இடங்களை பார்ப்பது நன்மைகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் சில தடை, தாமதம் உண்டாகும். சிலர் நிரந்தர குடியுரிமை வாங்கி வெளிநாட்டில் வசிப்பார்கள். 8ஆம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் மறைமுக மற்றும் ரகசிய தொடர்புகள் இருக்கும். தனது சுகத்தை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். வாகன வசதிகள் சிறப்பு பெறும்.