உடலுக்கு போதுமான இரும்பு சத்துக்களை பெறுவதற்கு வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்

By Muthu Vinayagam Kosalairaman
Sep 28, 2023

Hindustan Times
Tamil

வைட்டமின் சி நிறைந்த உணவுகள் உடலுக்கு தேவையான இரும்பு உறிஞ்சலை அதிகப்படுத்துவதுடன், உடலுக்கு தேவையான ஒட்டு மொத்த ஊட்டச்சத்துகளையும் அதிகரிக்கிறது

சிட்ரஸ் பழங்கள் ------------------------------------------------------------ ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை ஆகிய பழங்கள் வைட்டமின் சி நிறைந்தவையாக உள்ளன. இவை தாவிர வகை உணவுகளான கீரை, பீனஸ் ஆகியவற்றில் இருந்தும் இரும்பு சத்துகளை உறிஞ்ச உதவுகிறது

ஸ்ட்ராபெர்ரிக்கள் ---------------------------------------------------------- போதுமான அளவில் வைட்டமின் சியை கொண்டிருக்கும் பெர்ரி பழங்களும் சிட்ரஸ் பழங்கள் போல் தாவிர வகை உணவுகளில் இருந்து இரும்பு சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது

பெல் பெப்பர் அல்லது குடை மிளகாய் -------------------------------------------------------------------- குடை மிளகாய், சிவப்பு, மஞ்சள் நிறைத்தில் இருக்கும் பெல் பெப்பர்கள் வைட்டமின் சி சத்துக்களின் சிறந்த ஆதாரமாக இருப்பதால் உடலுக்கு தேவையான இரும்பு சத்துகளை பெறுவதற்கு உதவி புரிகின்றன

கிவி  ----------------------------------------------------------------- வைட்டமின் சி சத்துக்களின் பவர்ஹவுஸாக இருந்து வரும் கிவி பழங்கள், உடலுக்கு இரும்பு சத்து தேவையை பூர்த்தி செய்து  மேம்படுத்துகிறது

கொய்யா பழம் ------------------------------------------------------------ கிவி போன்ற மற்றொரு பழமான கொய்யாவில் அளவுக்கு அதிகமாக வைட்டமின் சி நிறைந்துள்ளன. எனவே இரும்பு சத்துக்கள் நிறைந்த உணவாக இது கருதப்படுகிறது

பப்பாளி ---------------------------------------------------------- வெப்பமண்டல பழமாக திகழ்ந்து வரும் பப்பாளி இரும்பு சத்துக்கள், வைட்டமின் சி சத்துக்களின் ஆதாரமாக விளங்குகின்றன

ப்ரோக்கோலி -------------------------------------------------------------------- வைட்டமின் சி சத்துக்களுடன் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்ளை கொண்டிருக்கும் ப்ரோக்கோலி, இரும்பு சத்து உறிஞ்சலை அதிகப்படுத்தி ஒட்டு மொத்த உடல் நல ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது