தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததை தொடர்ந்து மத்திய காற்றின் தர மேலாண்மை ஆணையம் டெல்லி எம்.சி.ஆர் பகுதியில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
By Suguna Devi P Nov 17, 2024
Hindustan Times Tamil
டெல்லியில் காற்றின் தர நிர்ணய அளவு 420 ஆக உள்ளது. பொதுவாக AQI லெவல் 100-ஐ தாண்டினாலே சுவாசிக்க உகந்த காற்று அல்ல என்று கூறப்படும் நிலையில், 400+ என்பது டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டின் தீவிரத்தை உணர்த்துகிறது.
டெல்லியின் காற்று மாசுபாட்டிற்க்கு, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகளிலின் புகையும் ஒரு காரணம் ஆகும். மேலும் இது தவிர வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை உள்ளிட்ட பல காரணிகளும் இருக்கின்றன.
டெல்லி நகரம் முழுவதும் கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுரங்கம், சாலை போன்ற துளையிடும் பணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வாகன புகையால் ஏற்படும் மாசினை குறைக்க டெல்லி போக்குவரத்து கழக்கத்தால் 106 கூடுதல் கிளாஸ்தார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் மெட்ரோ 60 கூடுதலான பயணங்களை மேற்கொள்ள உள்ளது.
1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆன்லைனிலேயே வகுப்பெடுக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது.
நகராட்சி சார்பில் வீதியெங்கும் தண்ணீர் பீய்ச்சி அடித்து மாசு கட்டுப்படுத்தப்படுகிறது.
டெல்லியின் இந்த அதிக காற்று மாசு இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.