மேஷம் முதல் மீனம் வரை! ’பட்டம், பதவி, சுகம் தரும் 4ஆம் இடம்!’ ஜோதிடம் அறிவோம்!

By Kathiravan V
Dec 12, 2024

Hindustan Times
Tamil

ஒரு ஜாதகத்தில் கேந்திரங்கள் இனி அமையாத தூண்கள் போல் விளங்குகின்றது. குறிப்பாக 4ஆம் இடம் என்பது சுகம், தாய், பட்டம், பதவி, உயர்க்கல்வி, வாகனம், வீடு, முதலீடுகள் ஆகியவற்றை குறிக்கினது. 

கேந்திரங்களை பொறுத்தவரை உழைப்பின் மேன்மையை குறிப்பிடும் இடம் ஆகும்.  4ஆம் இடத்தில் சுபர் அல்லது பாவி ஆகிய இரண்டு கிரகங்களும் இருக்கலாம். இதனால் பாவக்கோள்கள் கேந்திரத்தில் இருப்பது பாதிப்புகளை தராது. 

நான்காம் இடத்தில் சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் 4ஆம் இடத்தில் திக்பலம் பெறுகின்றன. அதே போல் செவ்வாய் மற்றும் சூரியன் நிஷ்பலம் பெறுகின்றனர். இதில் செவ்வாய் 4ஆம் இடத்தில் இருந்தால் தோஷமாகவும் மாறும். சனி பகவானுக்கு 4ஆம் இடம் என்பது கல்வித்தடைகளை உண்டாக்கும்.

ஒருவருக்கு கிடைக்கும் வீடு, வாகனம், சுகம், முதலீடுகள் ஆகியவற்றை 4ஆம் இடத்தின் அடிப்படையில் கணிக்கலாம். 

சுக்கிரன் 4ஆம் இடத்தில் இருந்தால் சுகபோகமான வாழ்கை ஜாதகருக்கு அமையும். இவர்களுக்கு வசதியான வீடு, அந்தஸ்து மிக்க வாழ்கை கிடைக்கும். 

சந்திரன் 4ஆம் இடத்தில் இருக்கும் போது தாயாரின் உடல்நிலையில் சில பாதிப்புகளை உண்டாக்கும். அதே வேளையில் சந்திரன் தேய்பிறையாக இருக்கும் போது இந்த விதி வேலை செய்யாது.

அதிகம் பிரயாணங்களை குறிக்கும் இடமாகவும் 4ஆம் இடம் விளங்குகின்றது. 

ராகு, கேது ஆகிய கிரகங்கள் 4ஆம் இடத்தில் அமர்ந்து இருந்தால் ஜாதகருக்கு கல்வியில் மாறுபாடான படிப்பு படிக்கும் நிலை உண்டாகும். சிலருக்கு சொந்த ஊரை விட்டு செல்லும் நிலை ஏற்படும். 

உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.