கோடை காலத்தில் சருமத்தை ஈரப்பதமுடன் வைத்து கொள்ள உதவும் பழங்களை எவை என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Apr 02, 2024
Hindustan Times Tamil
நீர்ச்சத்து மிக்க டயட்டை பின்பற்றுவதன் மூலம் சருமத்தை ஈரப்பதத்துடனும், பளபளப்பாகவும் வைத்து கொள்ளலாம். கோடையில் சரும ஆரோக்கியத்தை சில பழங்கள் பேனி பாதுகாக்கின்றன
லிச்சி
பருவ கால பழமாக இருந்து வரும் லிச்சியில் அதிக அளவில் நீர்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் சருமத்துக்கு நன்மை தருகிறது. இதில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் கொலஜன் உற்பத்தியை மேம்படுத்தி சரும நெகிழ்வுதன்மையை அதிகரிக்கிறது
தர்ப்பூசணி
நீர்ச்சத்து மிக்க பழமாக இருக்கும் தர்ப்பூசணி உங்களது சருமத்தை மிருதுவாகவம், நெகிழ்வாகவும் வைத்து கொள்ள உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ, பி6, சி கொலஜன் உற்பத்தியை மேம்படுத்தி, சருமத்தை ஈரப்பதமாக்குகிறது
பெர்ரி பழங்கள்
ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. இதில் சருமத்துக்கு ஊட்டமளித்து, சரும ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது
பைனாப்பிள்
வைட்டமின் சி, அதிக நீர்ச்சத்து கொண்ட பழமாக இருந்து வரும் பைனாப்பிள் சரும நெகிழ்வுதன்மையை அதிகரித்து, பருக்கள் போன்ற சரும பிரச்னை ஏற்படாமல் தடுக்கிறது
பீச் பழங்கள்
பீச் பழங்கள் சருமத்தை ஈரபதமாக்கி, ஊட்டமளிக்கிறது. வைட்டமின் ஏ,பி, சி நிறைந்திருக்கும் இந்த பழம் சரும தோல் அமைப்பை உருமாற்றி, சரும் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கிறது
மிகப்பெரிய தோல்வியில் இருந்து வெற்றியாளனாக மாறுவது எப்படி? சில உதவிக் குறிப்புகள்.. இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே வெற்றியாளன் ஆவது உறுதி!