சந்திர பகவானின் நட்சத்திரமான அஸ்தம் நட்சத்திரம் புதன் பகவானின் கன்னி ராசியில் முழு நட்சத்திரமாக உள்ளது.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிபயங்கர புத்திசாலிகளாகவும், அதே வேளையில் பொறுமைசாலிகளாகவும் இருப்பார்கள்.
எப்போதும் அமைதியாக காட்டிக்கொள்ளும் இவர்களுக்கு படோதாபம் ஏதும் இருக்க வாய்ப்புகள் இல்லை.
தர்மசிந்தனைகள் கொண்டவர்களாக இருக்கும் இவர்கள் சுற்றுலா செல்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.
தொடக்க காலங்களில் கடினங்களை எதிர்கொண்டாலும், வாழ்கையின் பிற்பகுதியில், இவர்கள் பணக்காரர்களாக விளங்குவார்கள்.
ரகசியம் காப்பதில் கெட்டிக்காரர்களான இவர்கள் சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் முகத்தில் எப்போதும் புன்சிரிப்பு இருந்து கொண்டே இருக்கும். இரக்க சுபாவம் கொண்ட இவர்களுக்கு நன்றி உணர்வு இருக்கும்.
தேவ கணம் பொருந்திய அஸ்தம் நட்சத்திரம் ஆனது பெண் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்திற்கு உரிய விலங்கு பெண் எருமை, இந்த நட்சத்திரத்தின் விருட்சம் அத்தி மரம் ஆகும். இந்த நட்சத்திரத்தின் பறவையாக பருந்து உள்ளது.
முருங்கைக்காயில் உள்ள நன்மைகளை அறிந்து கொள்ளுங்க. அப்றம் அந்த காயை சாப்பிடாமா விட மாட்டீங்க