’மொபைல் போன்களின் ஹீரோ! ஜிரோவானாது எப்படி?’ Nokia போன் தோற்ற கதை!

By Kathiravan V
Dec 31, 2023

Hindustan Times
Tamil

நோக்கியா இன்றைக்கு நேற்றைக்கு தொடங்கப்பட்ட நிறுவனம் அல்ல; அதன் வரலாறு 1865ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது.

சுரங்க பொறியாளராக இருந்த நட் ஃப்ரெட்ரிக் ஐடெஸ்டாம் என்பவர் மரக்கூழ் ஆலை ஒன்றை தொடங்கினார். பின்னர் அந்நிறுவனம் நீர்மின்சாரம் தயாரிப்பதில் கவனம் செலுத்தியது.

1992 முதல் 2006 வரை நோக்கியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜோர்மா ஒல்லிலா, நோக்கியா நிறுவனத்தை மொபைல் போன் சந்தையில் வளர்ச்சி பெற அடித்தளமிட்டார்.

1992ஆம் ஆண்டில் நோக்கியா 1011 ரக மொபைல் போன் அறிமுகம் ஆனது. இது வணிக ரீதியாக கிடைக்கும் முதல் GSM மொபைல் போன் ஆகும்.

மொபைல் சந்தையில் ராஜாகவாக இருந்த நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வருகை ஏற்படுத்திய மாற்றத்தை உற்றுநோக்க தவறியது

iOS மற்றும் Android போன்ற மேம்பட்ட இயங்குதளங்களைத் தழுவுவதற்குப் பதிலாக அதன் சிம்பியன் OS-ஐ மட்டுமே பயன்படுத்தியதால் சந்தை மாற்றத்தை நோக்கியா கணிக்கத் தவறியது.

2011 இல் தங்கள் முதல் விண்டோஸ் தொலைபேசியை அறிமுகப்படுத்திய நேரத்தில், அது ஏற்கனவே மிகவும் தாமதமாகிவிட்டது.

”மாற்றம் ஒன்றே மாறாது என்ற தத்துவத்தை ஏற்காத எந்த நிறுவனமும் கால ஓட்டத்தில் கரைந்து போகும் என்பதற்கு நோக்கியாவின் வீழ்ச்சி உதாரணம்”

கொலஸ்ட்ராலை குறைக்கிறது