மறதியைச் சமாளிப்பது எப்படி?

By Marimuthu M
Sep 07, 2024

Hindustan Times
Tamil

வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். நினைவுத்திறனை மேம்படுத்தும். 

புதிர்கள் அடங்கிய விளையாட்டை ஆடுவது, புதிய விஷயங்களை வாசிப்பது, புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது அறிவாற்றல் திறனை மேம்படுத்தும்

காய்கறிகள் அடங்கிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நினைவுத்திறனை மேம்படுத்தும். 

அதிகப்படியான இனிப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது நினைவுத்திறனை மழுங்கச் செய்யும். எனவே, அதைக் குறைத்துக் கொள்வது நல்லது

காலண்டர் குறிப்புகள் எழுதுவது, டைரி எழுதி வைப்பது ஆகியவை தினசரி விஷயங்களை மறக்காமல் வைத்துக் கொள்ள உதவும்

தியானம், சுவாசப் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வதன் மூலம்  மன அழுத்தத்தைக் குறைத்து நினைவுத்திறனை மேம்படுத்தலாம். 

அதிகப்பட்சமாக மறதி ஏற்பட்டால், ஒரு நரம்பியல் உளவியலாளரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். 

மகரம் ராசியை விட்டு விலகும் ஏழரை சனி! கொட்டும் பணத்தை பிடிக்க ரெடியா? காத்து இருக்கும் சக்ரவர்த்தி வாழ்கை!