கிருஷ்ண பரமாத்மாவின் அருள் எப்போதும் உள்ள ராசிகள்

By Suriyakumar Jayabalan
Jul 08, 2023

Hindustan Times
Tamil

ரிஷப ராசி

கிருஷ்ண பரமாத்மாவின் ஆசிர்வாதம் இல்லாமல் உங்களது செயல் நடக்கவே வாய்ப்பு இல்லை. முழு முயற்சியால் அனைத்தையும் சாதிக்க கூடிய பலத்தை உங்களுக்கு அவர் கொடுப்பார். வாழ்நாள் முழுவதும் சாதகமான சூழ்நிலை ஏற்படும். உங்களது வாழ்க்கை மிகவும் அழகாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

துலாம் ராசி

இந்த சமூகத்தில் உங்களுக்கு தேவையான மரியாதையை கிருஷ்ண பரமாத்மா ஏற்படுத்திக் கொடுப்பார். காரணம், அவருக்கு பிடித்த ராசிகளில் நீங்களும் ஒருவர். 

கடக ராசி

கிருஷ்ண பரமாத்மாவின் மிகவும் நெருக்கமான ராசிகளில் நீங்களும் ஒருவர். அறிவுக்கூர்மையை அதிகப்படுத்தி இக்கட்டான சூழ்நிலையை சரி செய்ய வழிவகை செய்வார். தொட்டது அனைத்தும் முன்னேற்றம் அடையும் அளவிற்கு, தடையின்றி செயல்பட ஆசிகளை வழங்குவார். 

சிம்ம ராசி

கடினமாக உழைக்கக்கூடிய உங்களுக்கு தேவையான பலன்களை அள்ளிக் கொடுப்பார் கிருஷ்ண பரமாத்மா. தனக்கான வேலையை நேர்மையாக செய்தால், அதிக பலன்கள் தானாக தேடி வரும். எடுத்த காரியத்தை முடிக்க நினைக்கும் உங்களுக்கு வெற்றியை கட்டாயம் கொடுப்பார் கிருஷ்ண பரமாத்மா.