விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

By Stalin Navaneethakrishnan
Aug 05, 2023

Hindustan Times
Tamil

இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான தம்பதியினர் குழந்தையின்மை பிரச்சினையினால் மிகவும் அவதிப்படுகின்றனர். பிரச்சினை ஒன்று ஆண்களிடம் இருக்கலாம் அல்லது பெண்களிடம் இருக்கலாம்

ஆண்களுக்கு அவர்களது விந்துவில் எவ்வளவு உயிரணுக்கள் என்பதைச் சார்ந்து இந்த பிரச்சினை வருகிறது

முதற்கட்டமாக விந்தணுக்களின் சோதனையை வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று முறையாவது நாம் செய்து பார்க்க வேண்டும்

விந்தணுக்களை அதிகரிப்பதற்கு நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நன்றாக ஓடுதல், நீச்சல், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளை நீங்கள் செய்யும் பொழுது விந்தணுக்கள் நன்றாகவே அதிகரிக்கும்

யோகா, தியானம் உள்ளிட்டவற்றை நீங்கள் செய்யும் பொழுது, இயல்பாகவே உங்கள் மன அழுத்தம் குறையும்;நன்றாக தளர்வு நிலையில் இருப்பீர்கள். அப்படி இருக்கும்போது விந்தணு உற்பத்தி பணி நன்றாக நடக்கும்

புகைப்பிடித்தல் உங்களது விந்தணுக்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துவிடும். ஆகையால் அதனை தயவு செய்து அதனை தவிர்த்து விடுங்கள்

பாக்ஸ் டைப்பில் கிடைக்கும் உள்ளாடைகளை அணியுங்கள்நெருக்கமான உள்ளாடை வடிவை நீங்கள் தவிர்த்துக் கொள்ளலாம்

இரவில் உறங்குவதற்கு முன்னதாக இரண்டு ஏலக்காய்களை சாப்பிட்டு விட்டு படுங்கள். ஏலக்காயில் உள்ள வேதிப்பொருட்கள் நமது விந்து உற்பத்திக்கு மிகவும் நல்லது

வாழைப்பழம், முட்டை, கீரை, நட்ஸ் ஆகியவை விந்தணு அதிகரிக்க உதவும்

கோடைக் காலத்தில் வியர்க்குரு வராமல் தடுப்பதற்கான ஈஸி டிப்ஸ் இதோ..!