கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Apr 27, 2024
Hindustan Times Tamil
அதிகரிக்கும் வெப்பத்தினால் உடல் ஆரோக்கியத்தில் தாக்கம் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு அமைப்பை பலவீனப்படுத்தும். எனவே கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவாக்கும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
யோகர்ட்
உடல் உள்ள சூட்டை குறைக்கும் தன்மை யோகர்டுக்கு உள்ளது. இதில் ப்ரோ பயோடிக்குகள் நிறைந்து காணப்படுவதால் செரிமான ஆரோக்கியத்துக்கு நன்மை தருவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது
வைட்டமின் சி நிறைந்த பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி, பப்பாளி போன்ற பழங்களில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலை குளிர்ச்சி அடைய செய்வதுடன், உடலையும் நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. அத்துடன் சரும ஆரோக்கியத்தையும் பேனி பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது
துத்தநாகம் நிறைந்த உணவுகள்
பசலை கீரை, பூசணி விதை, இறைச்சிகளில் துத்நாகம் நிறைந்து காணப்படுகிறது. இவை கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதோடு ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது
இரும்புசத்து நிறைந்த உணவுகள்
நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவாக்க இரும்பு சத்து இன்றியமையாததாக உள்ளது. நட்ஸ், விதைகள், பச்சை காய்கறிகள் இரும்பு சத்துகளுக்கான சிறந்த ஆதாரமாக உள்ளது
சீனி கிழங்கு
கார்ப்போஹைட்ரேட்கள் நிறைந்திருக்கும் சீனி கிழங்கு உடலுக்கு வேண்டிய ஆற்றலை தருகிறது. இதில் இருக்கும் பீட்டா கரோடீன், வைட்டமின் சி, பொட்டாசியம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
Radish : யார் முள்ளங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் தெரியுமா!