பார்வை திறனை மேம்படுத்த உதவும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
May 02, 2024

Hindustan Times
Tamil

ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த டயட்டை பின்பற்றினால் கண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதுடன் பார்வை திறனும் மேம்படுகிறது

மீன் 

சூரை, மத்தி, சாலமன் மீன் வகைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை கண்களை லூப்ரிகேட் செய்து பார்வைதிறனை மேம்படுத்துகிறது

பெர்ரி பழங்கள் 

பிளாக்பெர்ரி, ராஸ்ப்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இருக்கும் வைட்டமின் சி மாகுலர் சிதைவு பாதிப்பு, கண்புரை பாதிப்பு அபாயத்தை குறைத்து பார்வை திறனை அதிகரிக்க செய்கிறது

விதைகள் மற்றும் நட்ஸ்

வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் கண்கள் தொடர்பான பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது

ஆரஞ்சு 

இதில் அதிகப்படியான வைட்டமின் சி உள்ளது. இதனால் மாகுலர் சிதைவு தடுக்கப்பட்டு பார்வை திறன் மேம்படுகிறது

சிலுவை காய்கறிகள்

இலைகளுடன் கூடிய சிலுவை காய்கறிகளான ப்ரோக்கோலி, காலிபிளவர், ப்ரூசல்ஸ் போன்றவற்றில் அடிப்படை வைட்டமின்கள், தாதுக்கள், பைட்டோ நியூட்ரியன்ட்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது

 ‘குளிகை நேரம் என்றால் என்ன? குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?’