ஊட்டச்சத்துகளின் பவர்ஹவுஸ் ஆக இருந்து வரும் எள்ளு விதைகளில் இருக்கும் உடல் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Nov 01, 2024
Hindustan Times Tamil
மிகவும் சிறியதாக இருக்கும் எள்ளில் ஊட்டச்சத்து மிக பெரிய அளவில் உள்ளது. உங்கள டயட்டில் தவறாமல் சேர்க்ககூடிய உணவாக எள் இருந்து வருகிறது
செரிமானம், இதய ஆரோக்கியம், ரத்த அழுத்தம் கட்டுப்பாடு என எள்ளில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன
உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு மற்றும் சேர்மானங்கள் எள்ளில் இருப்பதால் கொல்ட்ரால் அளவை குறைக்கிறது. இதில் இருக்கும் ட்ரைக்ளைசராய்டுகள் இதய நோய் பாதிப்பு அபாயத்தை குறைக்கிறது
30 கிராம் எள்ளில் 3.5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்துக்கு ஆதரவு அளிப்பதுடன், உடல் பருமன், டைப் 2 நீரிழவு பாதிப்பு ஏற்படாமல் குறைக்கிறது
30 கிராம் எள்ளில் 5 கிராம் புரதம் உள்ளது. தாவரம் சார்ந்த சிறந்த புரத ஆதாரமாக திகழ்கிறது. இதை பொறித்தும் சாப்பிடலாம்
அதிகப்படியான மெக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் ரத்த அழுத்தத்தை குறைத்து, பிளேக் உருவாக்கதை தடுக்கிறது
கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் நிறைந்திருக்கும் எள்ளு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. நீரில் ஊறவைத்து சாப்பிடலாம்
கார்த்திகை மாதம் தொடங்கி விட்டது. பெரிய கார்த்திகை எனும் கார்த்திகை திருநாள் இன்னும் சில தினங்களில் வரப்போகிறது. கார்த்திகை தீபம் ஏற்றும் போது பின்பற்றவேண்டியவை.