பூசிணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Apr 07, 2024

Hindustan Times
Tamil

ஊட்டச்சத்து மிக்க காய்கறியாக இருந்து வரும் பூசணிக்காய் உடலுக்கு தேவையான அடிப்படை வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்களை கொண்டுள்ளது

வைட்டமின் ஏ,சி, பொட்டாசியம், கால்சியம், போலேட், நார்ச்சத்து, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகள் பூசணிக்காயில் நிரம்பியுள்ளன. இவை பல்வேறு உடல் செயல்பாட்டுக்கு உதவுகிறது

பீட்டா கரோடீன், வைட்டமின் ஏ செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் பல்வேறு தொற்றுகளின் பாதிப்பு மற்றும் உடல்நல குறைவை எதிர்த்து போராட உதவுகிறது

இதில் இடம்பிடித்திருக்கும் போதிய அளவு பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. அத்துடன் இருதயம் தொடர்பான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. வயது காரணமாக ஏற்படும் மாகுலர் சிதைவு பாதிப்பை தடுத்து, கூர்மையான பார்வை பெற உதவுகிறது

பூசணியில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஈ சத்துக்கள், பீட்டா கரோடீன் ஆகியவை ஆரோக்கியமான சருமத்தை பெற உதவுகிறது. இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ப்ரீ ரேடிக்கல்லில் இருந்து பாதுகாக்கிறது. கொலஜன் உற்பத்தியை அதிகரித்து இளமை தோற்றத்தை பெற உதவுகிறது

நார்ச்சத்துக்கள், ப்ரீபயோடிக் சேர்மானங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கல், வயிற்றுபோக்கு பாதிப்புக்கு தீர்வு அளிக்கிறது

பூசணி குறைவான கலோரிகளும், அதிக நார்ச்சத்தகளையும் கொண்ட காய்கறியாக உள்ளது. விரைவில் வயிறு நிரம்பிய உணர்வை தருவதுடன், அதிக கலோரிகள் எடுத்துக்கொள்வதை குறைத்து எடை குறைப்புக்கு வழி வகுக்கிறது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சிக்கு எதிரான பண்புகள் கொண்ட பூசணி உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்கிறது. கீல்வாதம், இதய நோய் தொடர்பான அழற்சிகளை போக்குகிறது

நீர்சத்து மிகுந்து காணப்படுவதால் உடலை நீரேற்றதுடன் வைத்திருப்பதோடு உடலின் இயக்கம், செரிமானம், உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவுகிறது

மஞ்சள் நீரின் நன்மைகள்