வக்ரம் பெறும் குருவால் பண மழையில் நனையும் 7 ராசிகள்! சொத்து சுகத்துடன் வாழும் ராசிகள் இதோ!

By Kathiravan V
Sep 15, 2024

Hindustan Times
Tamil

வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வரை குரு பகவான் வக்ர நிலையை அடைகிறார். இந்த 4 மாத காலத்தில் பண மழையில் நனைய போகும் ராசிகள் குறித்து தற்போது பார்க்கலாம். ஜோசியத்தை பொறுத்தவரைக்கும் ஜாதகத்தில் முழு சுப கிரகம் ஆன குரு பகவான் வக்ர நிலையை அடைவதால் அதிகபடியான நன்மைகளை தரும். 

மேஷ ராசி அல்லது மேஷ லக்னத்தில் பிறந்தவங்களுக்கு வக்ர குரு காலம் பண மழை கொட்டும் காலமாக இருக்கும். தன ஸ்தானம் எனப்படும் 2ஆம் வீட்டில் குரு பகவான் வக்ரம் பெற உள்ளார்.  அபரிவிதமான பணத்திற்கு உரிய கிரகம் ஆக குரு பகவான் உள்ளார். வருமானம் அதிகரிக்கும்.

ரிஷப ராசி அல்லது ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வருவாய் ஈட்டும் வழிகள் அதிகம் உண்டு. தனக்காரகன் ஆன குரு பகவான் உங்கள் ராசியில் உள்ளதால் எடுக்கும் முயற்சிகள் மூலம் தன வரவு அதிகரிக்கும். காலபுருஷனுக்கு இரண்டாம் வீடு ரிஷபம் தன ஸ்தானம் என்பதால் ரிஷபம் ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் சொத்துக்களை சேர்பீர்கள். 

கடக ராசி மற்றும் கடக லக்னத்தில் பிறந்தவர்கள் பண மழையில் நனைய அதிக வாய்ப்பு உள்ளது. லாபஸ்தானம் எனும் 11ஆம் இடத்தில்  உள்ள குரு வக்ரம் பெறுகிறார். இதனால் பணம் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு வேலைகே செல்லாமல் பணவரவு இருக்கும். குடும்பம் மற்றும் உறவுகள் நிதிரீதியாக உதவுவார்கள். 

சிம்ம ராசி அல்லது சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் பாவத்தில் குரு பகவான் வக்ரம் அடைய உள்ளார். இதனால் தொழில் விருத்தி அடைந்து லாபம் கிடைக்கும். இதுவரை மெதுவாக சென்று கொண்டு இருந்த தொழில் சிறப்படைந்து ஆச்சரியம் தரும். செய்யும் செயல்கள் வெற்றி அடைந்து உங்களை உற்சாகப்படுத்தும்.

கன்னி ராசி மற்றும் கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் உள்ள குரு பகவான் வக்ரம் பெறுவதன் மூலம் நன்மைகளை செய்வார். முன் ஜென்மத்தில் செய்த நன்மைகளுக்கு ஏற்ற பலன்களை குருபகவான் ஏற்படுத்தி தருவார். பணவரவு அதிகப்படுத்தி உங்களை ஆனந்தப்படுத்தும். 

வக்ரம் பெறும் குருவால் பண மழையில் நனையும் 7 ராசிகள்! சொத்து சுகத்துடன் வாழும் ராசிகள் இதோ!

வக்ரம் பெறும் குருவால் பண மழையில் நனையும் 7 ராசிகள்! சொத்து சுகத்துடன் வாழும் ராசிகள் இதோ!

மகர ராசி மற்றும் மகர லக்னக்காரர்கள் பண மழையில் நனையம் வாய்ப்பு அதிகம் உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் 5ஆம் இடத்தில் குரு பகவான் வக்ரம் பெறுகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுப கிரகங்கள் இருக்கும் போது ஜாதகர் வெற்றிகளை குவிப்பார். எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைந்து ஆனந்தம், தரும். 

கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பணமழையில் நனைய அதிக வாய்ப்புகள் உண்டு. சுப ஸ்தானத்தில் உள்ள கோச்சார குரு பகவான் வக்ரம் பெறுகிறார். சொந்த வீடு கட்டுவீர்கள். நிலம் வாங்கும் பாக்கியம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றிகளை தரும். 

இந்திய அணி 297 ரன்கள் குவித்து வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டி20 மேட்ச்சில் அசத்தியது.