அடேங்கப்பா…! ரிஷபத்தில் வக்ரம் பெறும் குரு பகவான்! கோடீஸ்வர யோகம் பெரும் 6 ராசிகள்!

By Kathiravan V
Sep 02, 2024

Hindustan Times
Tamil

ரிஷபம் ராசியில் உள்ள குரு பகவான் வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி வரை வக்ரம் பெறுகிறார். இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி சில ராசிகள் மற்றும் லக்னத்திற்கு உண்டு. 

வக்ரம் பெறும் கிரகங்களின் அழுத்தம் மிக அதிகம் ஆக இருக்கும் என்பதால் வக்ரம் பெற்ற கிரகங்கள் தரும் பலன்களும் மிகப்பெரிய அளவில் இருக்கும். 

சாய கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகு, கேது ஆகியோர் எப்போதுமே வக்ரநிலையில் பயணிக்க கூடிய கிரகங்கள் ஆகும். இவை தீய கிரகங்கள் என்பதால் இதன் தீமைகள் பெரிய அளவில் இருக்கும். ஆனால் குரு பகவான் முழு சுபர் என்பதால் வக்ரம் பெறும் போது எதிர்பாராத திடீர் தனவரவு பலருக்கு ஏற்படும். 

மேஷம் ராசி அல்லது மேஷம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவு இந்த காலகட்டத்தில் மிக அதிகமாக இருக்கும். இவர்களுக்கு 2ஆம் இடமான தன ஸ்தானத்தில் குரு பகவான் வக்ரம் பெற்று உள்ளார். காலபுருஷனுக்கு 2ஆம் வீடான ரிஷபம் என்பது சுக்கிரன் வீடாகும். இங்கு குரு பகவானின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பு அதிகம் ஆக இருக்கும். பேச்சைத்தொழிலாக கொண்டோருக்கு பண வரவு மிகப்பெரிய அளவில் இருக்கும். உணவுத்தொழில் சார்ந்து இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் மிகப்பெரிய வாய்ப்புகளை உண்டாக்கி தரும். கண் மற்றும் பல், முகம் சார்ந்த மருத்துவத் தொழிலில் இருப்பவர்களுக்கு நிதிரீதியிலான முன்னேற்றம் இருக்கும். 

அடேங்கப்பா…! ரிஷபத்தில் வக்ரம் பெறும் குரு பகவான்! கோடீஸ்வர யோகம் பெரும் 6 ராசிகள்!

ரிஷபம் ராசி அல்லது ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அடுத்த 4 மாதங்களில் அமோகமான வளர்ச்சி இருக்கும். இரு பகவான் உங்கள் ராசியில் இருப்பது மிக சுபமான ஒன்றாக உள்ளது. இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்க கூடிய முடிவுகள் வெற்றியை தருவதாக அமையும். 

கடகம் ராசி அல்லது கடகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சிறப்பான யோகம் உண்டாகும். லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குரு பகவான் வக்ரம் அடைகிறார். ஒருவருக்கு லாபம் கிடைக்க வேண்டும் எனில் 11ஆம் இடமான லாப ஸ்தானம் வலுபெற்று இருப்பது மிக அவசியம் ஆகும். 

சிம்மம் ராசி அல்லது சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் குரு பகவான் வக்ரம் பெறுகிறார். இதனால் தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளு வெற்றி அடையும். எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். பணியில் இருக்கும் சிம்ம ராசி மற்றும் லக்னத்திற்கு எதிர்பாராத சம்பள உயர்வு உண்டாகும்.

கடகம் ராசி அல்லது கடகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சிறப்பான யோகம் உண்டாகும். லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குரு பகவான் வக்ரம் அடைகிறார். ஒருவருக்கு லாபம் கிடைக்க வேண்டும் எனில் 11ஆம் இடமான லாப ஸ்தானம் வலுபெற்று இருப்பது மிக அவசியம் ஆகும். 

மகரம் ராசி அல்லது மகரம் லக்னத்திற்கு கண்டிப்பாக கோடீஸ்வர யோகம் உண்டு. உங்களின் பூர்வபுண்ணிய ஸ்தானம் ஆன 5ஆம் இடத்தில் உள்ள குரு வக்ரம் பெறுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த பிறவியில் செய்த நல்வினைகளுக்கான பலன்களை அனுபவிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு திடீர் எதிர்பாரா அதிர்ஷ்டம் உண்டாகும்.

’மேஷம் முதல் மீனம் வரை!’ நீச பங்க ராஜயோகம் என்றால் என்ன? நீசம் பெற்ற கிரகம் என்ன செய்யும்?