சூரிய பகவானின் மூன்று நட்சத்திரங்களில் ஒன்றாக உத்திராடம் நட்சத்திரம் உள்ளது.
நட்சத்திரத்தின் முதல் பாதம் குரு பகவான் ஆட்சி பெற்ற தனுசு ராசியில் உள்ளது.
கடைசி மூன்று பாதங்கள் சனி பகவானின் ஆட்சி பெற்ற மகரம் ராசியிலும் உள்ளது.
இரண்டு ராசிகளில் ஒரு நட்சத்திரம் இருப்பதால் உத்திராடம் நட்சத்திரம் தலையற்ற நட்சத்திரமாக கருதப்படுகிறது.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வயதில் மூத்தவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் தரக்கூடியவர்கள். பெற்றோர்களையே அதிகம் சார்ந்து இருப்பதால் சில நேரங்களில் சுயபுத்தியை இழக்க நேரிடலாம்.
நீச்சல் செய்வதில் உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சூரிய தசையும், இரண்டாவது தசையாக சந்திர தசையும், மூன்றாவது தசையாக ராகு தசையும், நான்காவதாக செவ்வாய் தசையும் வருகிறது. இவர்களுக்கு சந்திர மகா தசை; சந்திர புத்தி, ராகு மகா தசை; ராகு புத்தி, சனி மகா தசை; சனி புத்தி, கேது மகா தசை; கேது புத்தி, சுக்கிர மகா தசை ஆகியவை சாதகமான பலன்களை வழங்கும்.
உணவு ருசிக்க வெங்காயம், இஞ்சி, வெள்ளரிக்காய் வாங்கும் போது இத கொஞ்சம் கவனிங்க!