ரத்த தட்டு எனப்படும் பிளேட்லெட் அளவை அதிகரிக்க உதவும் பழங்கள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Oct 11, 2023

Hindustan Times
Tamil

ரத்தத்தின் ஒரு பகுதியாக இருந்து வரும் ரத்த தட்டுக்களான பிளேட்லெட் ரத்தம் உறைதலை தடுத்து மற்றும்  உடலில் இருக்கும் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. பிளேட்லெட் அளவு குறைவாக இந்தால் சோர்வு ஏற்படும்

வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்த ஆரோக்கியமான டயட் பழக்கம் ப்ளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கும். சில பழங்களும் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன

கிவி பழம்

வைட்டமின் சி சத்துக்களின் சிறந்த ஆதாரமாக இருந்து வரும் கிவி பழம் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிப்பதை உறுதி செய்வதுடன், அதன் இயல்பான செயல்பாட்டை ஆதிரிக்கிறது 

பப்பாளி

பப்பாளியில் உள்ள நொதிகள், ஊட்டச்சத்துகள் பிளேட்லெட் உருவாவதை ஊக்கப்படுத்துகிறது. அத்துடன் வைட்டமின்கள், தாதுக்களின் சிறந்த ஆதாரமாக இருந்து வரும் பப்பாளி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது

நெல்லிக்காய்

வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நெல்லிக்காய் வெள்ளை ரத்த அனுக்கள் மற்றும் பிளேட்லெட் உருவாகத்தை அதிகரிக்கிறது. தொற்று மற்றும் நோய்களுக்கு எதிரான இயற்கையான நோய் எதிர்ப்பு பூஸ்டராக செயல்படுகிறது

மாதுளை

மாதுளை அதிக அளவில் இரும்பு சத்துக்கள் உள்ளன. இவை செல் உருவாக்கத்தை மேம்படுத்தி, பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. இதில் இடம்பிடித்திருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுக்கு எதிராக போராட உதவுகிறது

பூசணிக்காய்

பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உங்கள் டயட்டில் பூசணிக்காயை சேர்க்க வேண்டும். இதிலுள்ள வைட்டமின் ஏ அதிக பிளேட்லெட்டுகளை உற்பத்தி செய்ய எலும்பு மஜ்ஜையை தூண்டுகிறது

பிஸ்தாவின் நன்மைகள்