ரத்தத்தில் ஆக்ஸிஜன் சப்ளையை அதிகரிக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
May 09, 2024

Hindustan Times
Tamil

ரத்தத்தில் போதிய அளவில் ஆக்ஸிஜன் இருந்தால் மட்டுமே உடல் இயக்கமானது சீராக இருக்கும். அந்த வகையில் நாம் அன்றாடம் சாப்பிடும் சில உணவுகளில் ஆக்ஸிஜன் அளவு இயல்பாகவே அதிகமாக உள்ளது

மஞ்சள்

உடலின் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்க மஞ்சள் உதவுகிறது. ரத்த நாளங்களை விரிவடைய செய்து உடல் உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது

பசலை கீரை

நைர்ரேட்களின் சிறந்த ஆதாரமாக இருப்பதால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுவதுடன், உடல் முழுவதும் ஆக்ஸிஜன் பெற செய்கிறது

மாதுளை

இரும்பு சத்து, தாமிரம், துத்தநாகம், அடிப்படை தாதுக்கள் நிறைந்திருக்கும் மாதுளை உடலின் முக்கிய உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளையை அதிகரிக்க வைக்கிறது

அவகோடா

அடிப்படை வைட்டமின்கள், தாதுக்கள், போலேட், சோலின் நிறைந்திருக்கும் அவகோடா ரத்தத்தில்ஆக்ஸிஜன் உறிஞ்சுவதை மேம்படுத்தி, அதன் அளவை அதிகரிக்கிறது

பீட்ரூட்

வைட்டமின் பி9, மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு சத்து நிறைந்திருக்கும் பீட்ரூட் உடலில் நைட்ரேட் உருவாக்கத்தை ஊக்கப்படுத்துகிறது. இதன் மூலம் ரத்தத்தில் ஆக்ஸிஜன் சப்ளை மேம்படுகிறது

இயற்கையாகவே கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் உணவுகள் எவையொல்லாம் என்பதை பார்க்கலாம்