டீயுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளக்கூடாத உணவுகள் என்னென்ன?
By Kalyani Pandiyan S Feb 29, 2024
Hindustan Times Tamil
அதிக மசாலா மற்றும் பொறிக்கப்பட்ட உணவுகளுடன் டீயை எடுத்துக்கொள்ள வேண்டாம். காரணம், அசிடிட்டி உருவாகும்.
அதிக இனிப்பான உணவுகளான கேக் உள்ளிட்டவற்றை சாப்பிடும் போது, அதனுடன் டீயை எடுத்துக்கொள்ள வேண்டாம். காரணம், அது விரைவாக நம்முடைய இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
சிப்ஸ், உப்பு நிறைந்த நட்ஸ் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது நாம் எடுக்கும் சோடியத்தின் அளவு அதிகமாகும். இவற்றுடன் டீயை எடுத்துக்கொள்ளும் போது வீக்கம், இரத்த அழுத்தம் உடனடியாக அதிகரித்தல் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
அதிக மசாலா கொண்ட உணவுளை டீயுடன் சேர்த்துக்கொள்ளும் போது, ஜீரண பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
சிட்ரஸ் அமிலம் கொண்ட ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட பழங்களுடனும் டீயை எடுத்துக்கொள்ள வேண்டாம். காரணம் அதுவும் அசிடிட்டியையும், வயிற்றில் தேவையில்லாத அசெளகரியமான சூழ்நிலையையும் உருவாக்கும்.
சிவப்பு இறைச்சி உணவுகளை டீயுடன் சேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டாம். இதுவும் வயிற்றில் பிரச்சினையை உருவாக்க வாய்ப்பு இருக்கிறது.
பதப்பட்ட உணவுகளுடன் டீயை எடுத்துக்கொள்ள வேண்டாம். காரணம், அதனுடன் சேர்க்கப்படும் சில பொருட்கள் டீயுடன் கலக்கும்போது வயிறில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
உளுந்தம் பருப்பில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்