பொடுகு தொல்லையை போக்க வீட்டில் இருந்தபடியே சில டிப்ஸ்களை ஃபாலோ செய்து எதிர்பார்த்த பலன் பெறலாம்
By Muthu Vinayagam Kosalairaman Nov 02, 2024
Hindustan Times Tamil
பொடுகு தொல்லை எரிச்சலூட்டும் விதமாக நீண்ட கால பிரச்னையாக இருந்து வருகிறது. சில இயற்கை முறைகளை பின்பற்றுவதன் மூலம் பொடுகு உருவாகும் அறிகுறிகளை தடுப்பதுடன், தலைமுடி வேர்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்
பொடுகு தொல்லையை போக்கும் விதமாக உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் சேர்க்க வேண்டிய சில சிகிச்சைகளை பார்க்கலாம்
நுண்ணுயிர், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்டிருக்கும் டீ ட்ரீ ஆயில் பொடுகு அறிகுறிகளை தணிக்கிறது. இந்த எண்ணெய்யை அப்படியே பயன்படுத்தாமல் நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் எண்ணெய்யுடன் சேர்த்து உபயோகிப்பதன் மூலம் சருமத்தில் எரிச்சல் அடைவதை தவிர்க்கலாம்
சருமம், முடி வேர்களை நீரேற்றதுடன் வைத்துக்கொள்ள உதவும் தேங்காய் எண்ணெய், வீக்கத்தை குறைக்கிறது. உச்சந்தலையில் நுண்ணுயிர் தன்மையை மேம்படுத்தி பொடுகை நீக்க உதவுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது
பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கும் கற்றாழை பொடுகுகளை நீக்க, வீக்கத்தை குறைக்கிறது. பூஞ்சை தொற்றுக்கு எதிராக போராட உதவுகிறது
மனஅழுத்தம் காரணமாக வறட்சி உருவாகி அரிப்பு ஏற்பட்டு பொடுகு உருவாகிறது. எனவே தியானம், யோகா, ஆழமாக சுவாசிப்பதன் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிக்கலாம்
தலைமுடி வேர்களின் pH அளவை சீராக்க உதவுவதுடன், பூஞ்சை வளர்ச்சியை குறைக்கிறது. இதனை அப்படியே பயன்படுத்தாமல் ஷாம்பூ அல்லது எண்ணெய்களில் நீர்த்து போக செய்து யூஸ் செய்யலாம்
மணாலி
மணாலியின் குளிர்ச்சியான இரவுகளில் நெருப்பு சத்தங்கள் மற்றும் பிரமாண்டமான பனி மூடிய இமயமலை மலைகளின் காட்சிகள் உங்கள் பயணத்தை இன்னும் மறக்கமுடியாததாக ஆக்குகிறது.