டயபிடிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக மீன் வகை உணவுகள் இருக்கின்றன. இந்த உணவுகளால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 20, 2024

Hindustan Times
Tamil

இதய ஆரோக்கியம் உள்பட பல்வேறு நன்மைகளை கொண்டிருக்கும் மீன் வகை உணவுகள் டயபிடிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கும் சிறந்த உணவாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்

குறைவான கலோரி, ஒமேகா 3 சத்துகள், வளர்சிதை மாற்றத்துக்கு ஆதரவு அளிப்பது போன்ற சில காரணங்களால் டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்கள் மீன் வகை உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது

அதிக புரதம், லிபிட் உள்ளடக்கம் கொண்டிருப்பதால் மீன் உணவுகள் குறைவான கிளைசெமிக் குறியீட்டை கொண்டதாக உள்ளது. இவை ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கிறது

மீன்களில் குறைவான கலோரிகளே இருப்பதால் எடை அதிகரிப்பதை தடுப்பதுடன் சர்க்கரை அளவை நிர்வகிக்கிறது

மீன்களில் இருக்கும் குறைவான கார்ப்போஹைட்ரேட் அளவு டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்கள் உடல்நிலையை  சரியாக நிர்வகிக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான கார்ப்போஹைட்ரேட் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது

மீன்களில் உடலுக்கு அத்தியாவசியாக தேவைப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை அழற்சிகளை குறைத்து, ட்ரை க்ளிசைரட் அளவை சீராக வைக்கிறது. இதனால் இருதயம் தொடர்பான நோய்களின் ஆபத்து குறைகிறது

மீன்களில் இடம்பிடித்திருக்கும் வைட்டமின் டி3, பாஸ்பரஸ், கால்சியம் டயபிடிஸ்க்கு தொடர்புடைய எலும்புப்புரை பாதிப்பை குறைக்கிறது

மீன்களில் இருக்கும் வைட்டமின் பி2, பி12 வளர்சிதை மாற்றத்தில் பங்களிப்பை தந்து டயபிடிஸுடன் தொடர்புடைய சிறுநீரக சிக்கல்களை தடுக்கிறது 

வேப்பிலை தரும் நன்மைகள்