பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான ஃபாத்திமாபாபு தன்னுடைய காதல் கதையை அண்மையில், கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

By Kalyani Pandiyan S
Sep 15, 2024

Hindustan Times
Tamil

அந்த உரையாடலில் ஃபாத்திமா பேசும் போது, "எனக்கு டேபிள் டென்னிஸ் விளையாடும் பழக்கம் உண்டு. அங்குதான் இவர் எனக்கு அறிமுகம் ஆனார். நான் அப்போது செய்தி வாசிப்பாளராக இல்லை. இவரிடம் வியர்வை நாற்றமே வராது. துணியை மிகவும் நேர்த்தியாக அயர்ன் செய்துதான் அணிவார். 

இவரிடம் எதைப்பற்றியும் நாம் மனம் விட்டு, இயல்பாக பேச முடியும். நாம் பேசுவதை அமைதியாக கேட்கவும் செய்வார். இவைகளெல்லாம் இவரிடம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

ஒரு நாள் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, இவர் என் கண்ணில் தெரியும்படி அவருடைய டைரியை வைத்தார்.

அதில் என்னுடன் இவர் வாழ வேண்டும் என்ற ரீதியில் சிலவற்றை எழுதி இருந்தார். அதைப் பார்த்தவுடன் நான் இவரிடம், எனக்கு இதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது. நான் உன்னிடம் அந்த எண்ணத்தில் பழகவே இல்லை என்று சொல்லி, அங்கிருந்து நடக்க ஆரம்பித்து விட்டேன். அதைக் கேட்ட இவர், சடாரென்று மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார்.  

இவர் மயக்கம் போட்டு விழுவதை பார்த்த அங்கிருந்த மற்ற டேபிள் டென்னிஸ் வீரர்கள், இவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார்கள்.  இதனையடுத்து இந்த விஷயத்தை நான் அங்கிருந்த மருத்துவரிடம் சொல்ல, அவர் என்னை பார்த்து அப்படியானால் ஏன் அவருக்கு டென்ஷன் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். அந்த வார்த்தை என்னை மிகவும் ஆழமாக பாதித்தது. அந்த வார்த்தை தான் என்னுடைய முடிவிலும் மாற்றத்தை கொண்டு வந்தது.

புத்தாண்டில் கோடிகளை குவிக்க போகும் ரிஷபம் ராசி!’ 2025ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு ராசிபலன்கள்!