உலக அளவில் டாப் இடத்தை பிடித்திருக்கும் காபி வகைகள் எவை என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Mar 08, 2024
Hindustan Times Tamil
உணவு மற்றும் பயண ஆலோசனை வழங்கி வரும் பிரபல தளமான டேஸ்ட்அட்லஸ் உலகின் சிறந்த 38 காபி வகைகளில் லிஸ்டில் வெளியிட்டுள்ளது
இந்த லிஸ்டில் டாப் 10 இடத்தில் இந்தியர்களால் பரவலாக பருகப்படும் பில்டர் காபியும் இடம்பிடித்துள்ளது
க்யூபா நாட்டை பூர்வீகமாக கொண்டிருக்கும் க்யூபா எஸ்பிரஸ்சோ காபி இந்த லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது
பால், சர்க்கரை, சிக்கிரி கலந்த காபிதூள் சேர்த்து பில்டரில் தயார் செய்யப்படும் இந்தியர்களின் பில்டர் காபி இந்த லிஸ்டில் இரண்டாவகு இடத்தை பிடித்துள்ளது
கிரீஸ் நாட்டில் பிரபலமான ப்ரீட்டோ எஸ்பிரஸ்சோ காபிக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. பாலை அடிப்படையாக கொண்டிருக்கும் குளிர்ச்சியான போம் வைத்து இந்த காபி தயார் செய்யப்படுகிறது
மற்றொரு கிரேக்க பூர்வீக காபியாக ப்ரீட்டோ கேப்பச்சினோ உள்ளது. நான்காவது இடத்தில் இருக்கும் இந்த காபி நுரை ததும்ப இருக்கும் கோல்ட் காபியாகவும் பலருக்கும் பிடித்தமானதாகவும் உள்ளது
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தித்திக்கும் சுவைமிக்க கேஃப் போப்பன் கண்டென்ஸ்ட் பால் மற்றும் பிளாக் காபி தனித் தனி அடுக்கை கொண்டதாக உள்ளது. இந்த காபி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது
உலகம் முழுவதும் கிடைக்ககூடிய காப்போசினோ ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. நீராவியுடன் கூடிய பால் போமில் தயார் செய்யும் சுவை மிக்க காபியாக இருந்து வருகிறது
சிறிய கப்களில் 2 அவுன்ஸ்களுக்கு மேலாக பரிமாறப்படாத டர்க்கிஷ் காபி உலக அளவில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது
ரிஸ்ட்ரெட்டோ என்ற செறிவூட்டப்பட்ட எஸ்பிரெசோ ஷாட் இந்த லிஸ்டில் எட்டாவது இடத்தில் உள்ளது. நீரின் இருப்பு குறைந்து கொழு கொழுவென ருசியுடன் அமைந்திருக்கும்
குளிர்ச்சியான காபி வகையாக இருக்கும் பிராப்பி காபி, எஸ்பிரெஸ்சோ, பால், சர்க்கரை, ஐஸ் ஆகியவற்றின் கலவையாக உள்ளது
வியட்நாம் நாட்டை பூர்வீகமாக கொண்ட வியட்நாமிஸ் காபி இனிப்பு மற்றும் க்ரீம் சுவையை கொண்டதாக உள்ளது. பார்ப்பதற்கு மிருதுவாக இருக்கும் இந்த காபி பத்தாவது இடத்தை பிடித்துள்ளது