’மேஷம் முதல் மீனம் வரை!’ உங்கள் ஜாதகத்தில் குரு பகவான் எங்கு இருந்தால் சிறப்பு!

By Kathiravan V
Nov 04, 2024

Hindustan Times
Tamil

முதல்நிலை  சுபக்கிரகமான குரு பகவான் ஆனவர் ஒருவரின் ஜாதகத்தில் 1, 5, 9 ஆம் வீடுகளில் இருந்தால் நன்மையை தரும். 

ஒருவரது லக்கினத்தில் குரு பகவான் இருந்தால் அதி உத்தமம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். ஜாதகன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.  நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. அவனுடைய வாழ்வில் அது இரண்டும் இருக்கும்.அந்த இரண்டு சூழ்நிலைகளிலும், குரு அவனுக்குக் கை கொடுப்பார்.

ஒருவரது ஜாதகத்தில் 7ஆம் இடத்தில் குரு பகவான் இருந்தாலும் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த நிலையில் லக்கினத்தைத் தன் கண் பார்வையில் வைத்திருப்பதோடு, ஜாதகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொடுப்பார்.

அதே போல் குரு பகவான் ஆனவர் 5 மற்றும் 9ஆம் வீடுகளில் குரு பகவான் இருந்தாலும் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளையே தரும். 5ல் இருந்து தனது விஷேச பார்வையான 9ஆம் பார்வையாக லக்கினத்தை அவர் தன் கண்ணில் வைத்திருப்பார். 9ஆம் வீட்டில் இருந்தாலும், தனது 5ஆம் பார்வையால், அவர் லக்கினத்தைத் தன் கண்ணில் வைத்திருப்பார்.

9ல் குரு இருந்தால் ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். 5ல் குரு இருந்தால் ஜாதகன் அறிவு ஜீவியாக இருப்பார்.

ஜாதகத்தில் 4, 7, 10ஆம் வீடுகளில் குரு இருந்தால் நன்மையான பலன்கள் கிடைக்கும். அதற்கு அடுத்ததாக 2,11 ஆம் வீடுகளில் குரு இருந்தாலும் சிறப்புகளை தரும். 

3,6,8,12 ஆம் வீடுகளில் குரு இருக்ககூடாது. அதோடு அவர் ஜாதகத்தில் நீசமாகி அடிபட்டிருக்கக்கூடாது. அப்படி இருந்தால், ஜாதகத்தில் வேறு நல்ல அம்சங்கள் இல்லையென்றால் ஜாதகனின் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும்.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்