Exam Tips : குழந்தையை முழு மதிப்பெண்கள் பெற வைக்க போராட்டமாக உள்ளதா? இதோ வழிகள்!

By Priyadarshini R
Nov 19, 2023

Hindustan Times
Tamil

ஒரு வழியை அமையுங்கள் குழந்தைகளுக்கு ஒரு முறையான நாளை திட்டமிடுங்கள். குறிப்பிட்ட நேரத்தில் படிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் திரை நேரம், விளையாட்டு, சாப்பாடு, தூக்கம் என அவர்களின் அனைத்து வேலைகளுக்கு நேரம் தனித்தனியாக ஒதுக்கிக்கொடுங்கள். குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் அவசியம். நன்றாக தூங்கினால்தான் அவர்களால் எதிலும் கவனம் செலுத்த முடியும். எனவே தேவையான அளவு தூக்க நேரத்தை ஒதுக்கிவிட்டு மற்ற பணிகளுக்கான நேரத்தை சமமாக பிரியுங்கள்.

தெளிவான இலக்குகளை நிர்ணயுங்கள் ஒவ்வொரு பாடம் மற்றும் தேர்விலும் அவர்கள் குறிப்பிட்ட அளவு இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். அவற்றை அடைய அவர்களை ஊக்கப்படுத்துங்கள். அது அவர்களுக்கு எதையோ சாதித்த உணர்வை கொடுக்கும். அவர்கள் சிறு சிறு லட்சியங்களாக நிறைவேற்ற, பெரிய கனவுகளை வளர்த்துக்கொண்டு தானாவே அவற்றையும் அடைய சரியான வழியில் முயற்சி செய்வார்கள்.

கவனசிதறல் இல்லாத சூழலை உருவாக்குங்கள் படிக்கும் இடம் அமைதியாக இருக்க வேண்டும். அங்கு டிவி பார்ப்பது, பாட்டு கேட்பது போன்ற வேறு எதுவும் குழந்தைகளை திசை திருப்பக்கூடாது. அமைதியான சூழலில் அவர்கள் அழகாக படிக்க வேண்டும். அப்போதுதான் கவனம் முழுவதும் படிப்பில் இருக்கும். அவர்கள் நன்றாகவும் படிக்க முடியும்

நேர மேலாண்மை நேரம் மிகவும் முக்கியம். நேர மேலாண்மைதான் எந்த திட்டமிடலையும் சரியான பாதையில் கொண்டு செல்லும். அதை அவர்கள் சரியாக பின்பற்றினால்தான், முன்னேறமுடியும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எதில் அதிக நேரம் செலவிடவேண்டும் என்று அவர்களுக்கு கற்றுகொடுங்கள். இதனால் அவர்களால் அதிகப்படியான மனஅழுத்தமின்றி படிக்க முடியும்.

கற்கும் நுட்பங்கள் பல்வேறு படிக்கும் முறைகளை ஊக்கப்படுத்துங்கள். சுருக்கமாக விளக்குவது, அட்டைகளை பயன்படுத்துவது, நடத்துவிதத்தில் மாற்றம் என பல்வேறு வழிகளை பின்பற்றுங்கள். பல்வேறு கருவிகளையும் பயன்படுத்தி அவர்களுக்கு புரிந்துகொள்ள ஏதுவாக படிப்பை மாற்ற வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு படிக்கும் ஆர்வம் ஏற்படும்.

ரிவிஷன் செய்வதை வழக்கமாக்குங்கள் ஏற்கனவே படித்த பாடங்களை மீண்டும் அவர்கள் படிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பாடங்கள் நீண்ட நாட்கள் நினைவில் இருக்கும். தேர்வின்போது அவர்கள் அஞ்ச மாட்டார்கள்.

தேர்வு அச்சத்தை கையாள்வது மூச்சுப்பயிற்சிகள், தியானம் போன்றவை தேர்வு அச்சத்தை போக்குவதற்கு வழிக்கும் சில வழிகள். மாணவர்கள் இவற்றை பின்பற்றி அவர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை போக்கிக்கொள்ள வேண்டும். இது அவர்களின் அச்சத்தை போக்கி, கவனம் மற்றும் ஈடுபாட்டை படிப்பில் அதிகரிக்கும்.

தொழில்நுட்பத்தை நன்முறையில் பயன்படுத்துதல் கல்லி ஆப்கள், ஆன்லைனில் கிடைக்கும் கூடுதல் விளக்கங்கள், கல்வி இணைதளங்கள் என அவற்றின் வாயிலாக கூடுதலாக கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு புரியாதபோது, வேறு விளக்கங்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் அல்லது அவர்களை அதை செய்ய வைக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு கூடுதல் அறிவு கிடைப்பதுடன், புதிதாக ஒன்றை கற்றுக்கொண்ட மகிழ்ச்சியும் ஏற்படும்.

இடைவேளை அவசியம் ஒரேடியாக அவர்கள் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று அவர்களை அடைத்து வைக்கக்கூடாது. அவர்களுக்கு தேவையான இடைவேளை என்பது மிகவும் அவசியம். தொடர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு இடையிடையே சிறிய இடைவேளை கொடுக்க வேண்டும். இது அவர்களின் கவனிக்கும் திறனை அதிகரிக்கவும், புதுப்பித்துக்கொள்ளவும் உதவும்.

குழந்தைகளுக்கு ஆதரவான சூழல் அவர்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் உற்சாகத்தை கொடுக்க வேண்டும். கடைசியில் வரும் முடிவில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அப்படியே அவர்கள் தவறினாலும் எந்த இடத்திலும் அவர்களை குறை கூற கூடாது. அவர்களுக்கு ஆதரவாக இருந்தே அவர்களை அரவணைத்து நல்வழிப்படுத்த வேண்டும். எப்போதும் உங்கள் ஆதரவை மட்டும் விட்டுவிடக்கூடாது.

அவர்களின் சாதனைகளை கொண்டாட வேண்டும் உங்கள் குழந்தைகளின் வெற்றிகளை கொண்டாட வேண்டும். அவர்களின் முயற்சிகளை உற்சாகப்படுத்தவேண்டும். தேர்வில் வரும் மதிப்பெண்களை மட்டும் வைத்து பார்க்காமல், அவர்கள் கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்களை சுற்றி உற்சாகமான, நேர்மறை சூழலை எப்போதும் உருவாக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

நீரேற்றத்தை அதிகரிக்கும்