சமையலறையில் அழுக்கு படிந்து இருக்கும் எக்ஸாஸ்ட் ஃபேன் சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Nov 10, 2024

Hindustan Times
Tamil

சமையல் செய்யும் போது சமையலறையில் உள்ள எக்ஸாஸ்ட் ஃபேன் புகை மற்றும் வெக்கையை வெளியேற்றுகிறது

சமையலறை புகை மற்றும் எண்ணெய் காரணமாக எக்ஸாஸ்ட் ஃபேன் அழுக்காகவும் கருப்பாகவும் மாறும். எண்ணெய் கிரீஸ் அதில் ஒட்டிக்கொண்டிருக்கும்

இந்த அழுக்கு எக்ஸாஸ்ட் ஃபேனை சுத்தம் செய்வது சவாலான விஷயம்தான் என்றாலும், சில டிப்ஸ்களை பின்பற்றினால் எளிதாக சுத்தமாக்கிவிடலாம்

முதலில் எக்ஸாஸ்ட் ஃபேனை உலர்ந்த துணியால் துடைத்து தூசி மற்றும் கிரீஸை அகற்றவும்

ஒரு பாத்திரத்தில் சூடான நீரை எடுத்து அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்

எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் பேக்கிங் சோடா சேர்த்து, நன்கு கலந்து கலவையை உருவாக்கவும்

இந்த கலவையில் காட்டன் துணியை நனைத்து எக்ஸாஸ்ட் ஃபேன் பிளேட்டை சுத்தம் செய்தால் நன்கு மிளரும்

இந்த கலவை எக்ஸாஸ்ட் ஃபேனில் சிக்கியுள்ள கிரீஸை அகற்றிவிடும்

மாதத்துக்கு இரண்டு முறையாவது எக்ஸாஸ்ட் ஃபேனை இப்படி சுத்தம் செய்வதன் மூலம் நீண்ட காலம் நீடிக்கும்

கடுமையாக நடக்கும் பெற்றோர்களால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?