நுரையீரலை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் 4 பானங்கள் தெரியுமா?

By Stalin Navaneethakrishnan
Nov 10, 2023

Hindustan Times
Tamil

இந்த திரவம் மூச்சுத்திணறலை குறைக்கும். அப்படி என்ன பானம்?

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டுடன் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது உண்மையில் கடினமான பணியாகும்.

காற்று மாசு யுகத்தில் நாளுக்கு நாள் நுரையீரலில் பல்வேறு நோய் தொற்று அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமாக இருக்க உணவில் சிறிது மாற்றம் செய்ய வேண்டும்.

தொடர்ந்து குடித்து வந்தால் நுரையீரல் பிரச்சனைகளை குணப்படுத்தும் பல பானங்கள் உள்ளன. இது தவிர, புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கலாம்.

நுரையீரல் நீண்ட நேரம் சுத்தமாக இருக்க என்னென்ன பானங்கள் குடிக்க வேண்டும் என்று பார்ப்போம்

க்ரீன் டீயில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் நுரையீரலின் திறனை அதிகரித்து நுரையீரல் பிரச்சனைகளை எளிதில் நீக்குகிறது.

இஞ்சி டீயில் ஏராளமான அழற்சி எதிர்ப்பு பண்புகள்  நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் காற்று மாசுபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் எளிதில் நீங்கும்.

மிளகுக்கீரை தசைகளை தளர்த்த உதவுகிறது மற்றும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மிளகுக்கீரையில் உள்ள  கூறுகளும் நுரையீரலை சுத்தப்படுத்த உதவுகின்றன.

தேன் மற்றும் எலுமிச்சை தேநீர் நுரையீரலில் இருந்து சளியை அகற்ற மிகவும் உதவியாக இருக்கும். இந்த தேநீரின் பண்புகள் நுரையீரல் பிரச்சனைகளை நீக்குகிறது.

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்றலாம் என்பது பற்றி பார்ப்போம்