தளபதி படத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை அந்தப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் முரளி அப்பாஸ் குமுதம் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார். 

By Kalyani Pandiyan S
May 21, 2024

Hindustan Times
Tamil

நடிகர் ரஜினிகாந்த் அந்த சமயத்தில் மார்க்கெட்டில் நம்பர் ஒன் நடிகராக இருந்த போதும், அவர் ஒரு இளம் நடிகராக, கற்றுக்கொள்ளும் இடத்தில் இருந்தார். மணிரத்னம்  ‘அஞ்சலி’ என்ற படத்தை அப்போது இயக்கியிருந்தார். அந்தப் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில், ரஜினி மணிரத்னத்தை குறிப்பிட்டு, இரண்டு வயது குழந்தையை நீங்கள் இப்படி நடிக்க வைத்திருக்கிறீர்களே.. 

தயவுசெய்து நீங்கள் என்னையும் வைத்து ஒரு படம் எடுங்கள் என்று மிகவும் தாழ்மையாக கேட்டுக் கொண்டார். அவர் அப்படி கேட்டதுதான்  ‘தளபதி’ என்ற படமாக மாறியது. அந்த சமயத்தில் மற்ற படங்களிலெல்லாம் அவரை, மாலை 6 மணிக்கெல்லாம் அனுப்பி விடுவார்கள். அவர் செட்டிற்கு வந்தால், அவருடைய காட்சிகளை முதலில் எடுத்து விட்டு தான், மற்றவர்களுக்கான காட்சிகளை எடுப்பார்கள். 

அப்படி ரஜினி பீக்கில் இருந்த சமயம் அது. மணிரத்னம், ஊட்டியில்  ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்ற பாடலை, காலை 5 1/2 மணிக்கு  எடுத்துக் கொண்டிருக்கிறார்.அது டிசம்பர் மாதம் வேறு கடுமையான குளிர், இருந்த போதும் ரஜினி போர்வையை சுற்றிக்கொண்டு எல்லோருக்கும் முன்னர் அங்கு வந்து அமர்ந்திருப்பார். அந்த படத்தில் அவர் அவ்வளவு சின்சியராக வேலை செய்தார்.

அந்தப் படத்தில் மணிரத்னம் எடுக்கும் காட்சிகளில், அவர் எதிர்பார்த்தபடி ரஜினியால் நடிக்க முடியாமல் சிரமப்பட்டது உண்மைதான். அதனை தொடர்ந்துதான் அவர் கமலிடம் போன் செய்து, மணிரத்னத்தை தன்னால் சமாளிக்க முடியவில்லை என்று புலம்பினார். அந்த படப்பிடிப்பு நடந்த சமயத்தில் சொல்லும்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது.  

மைசூரில் கே ஆர்சன் என்ற ஒரு ரவுண்டானா இருக்கிறது. அங்கு நாங்கள்  சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கி கொண்டிருந்தோம். காட்சியின் படி, ரஜினிகாந்த் ஒரு காவல் அதிகாரியின் கையை வெட்ட வேண்டும். அதன் படிக்கட்டில் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். திடீரென்று ரஜினி மணிரத்னத்தை அழைத்து, மணி சார் நான் இந்த இடத்தில் தூங்கி இருக்கிறேன் என்று கூறினார். 

கொலஸ்ட்ராலை குறைக்கிறது