சாப்பிடுவதற்கு ஆசையாக இருந்தாலும் கர்ப்ப காலத்தில் சில உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதை செய்வதால் கர்ப்பம் தரித்த பெண்களுக்கும், வயிற்றில் உள்ள சிசுவுக்கும் ஆரோக்கிய குறைபாடு, பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Oct 10, 2024

Hindustan Times
Tamil

பழுத்த பப்பாளி பழம் அல்லது பப்பாளி காய் கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக கருச்சிதைவு, குறைமாத குழந்தை பிறக்ககூடும்

பைனாப்பிளில் இடம்பிடித்திருக்கும் ப்ரோமெலனின் என்கிற நொதி கருப்பை வாய் பகுதியை மென்மையாக்கி சுருக்கங்களுக்கு வழிவகுக்கும்

பேஸ்டுரைஸ் செய்யப்படாத பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களில் லிஸ்டீரிய போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம். இவை லிஸ்டிரியோசிஸ் தொற்று பாதிப்பை ஏற்படுத்தலாம்

நூடுல்ஸ் போன்ற மோனோசோடியம் க்ளூடாமேட் உணவு பொருள்கள் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவது  சிசுவின் மூளை வளர்ச்சியில் நரம்பியல் சார்ந்த விளைவுகளை ஏற்படுத்தும் 

அதிகப்படியான கஃபைன் பானங்கள் எடுத்துக்கொண்டால்  கருச்சிதைவு அல்லது சிசுவுக்கு எடை குறைப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்

அதிக அளவு பாதரசம் சிசுக்களின்  நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். சுறா, கேட்ஃபிஷ், வாள்மீன், கானாங்கெளுத்தி, சூரை மீன் போன்றவற்றை சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்கவும்

பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவும், கலோரிகள், சர்க்கரை மற்றும் கூடுதல் கொழுப்புகள் அதிகமாகவும் இருக்கும். மேலும் அவை எடையை அதிகரிக்கும் இதனால் பிரசவ சிக்கல்கள் மற்றும் குழந்தை பருவ உடல் பருமன் ஏற்படலாம்

நீரேற்றத்தை அதிகரிக்கும்