உதயநிதி துணை முதல்வரா? பஞ்ச் டையலாக் பேசி பட்டென முடித்த முதலமைச்சர்! சொன்னது என்ன தெரியுமா?
By Kathiravan V Aug 05, 2024
Hindustan Times Tamil
சென்னை கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், மழை பாதிப்பை எதிர்கொள்ள அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்டது, அதற்கு பதில் அளித்த அவர், ‘எத்தகைய மழை பெய்தாலும் அரசு எதிர்கொள்ள தயார்’ என்று கூறினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘அந்த கோரிக்கை வலுத்து உள்ளதே தவிர, இன்னும் பழுக்கவில்லை’ என்று பதில் அளித்தார்.
சேப்பாக்கம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடுத் துறை அமைச்சராக இருந்து வருகின்றார்.
Siddharth: நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோருக்கு ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றனர்.