அசைவத்தில் மட்டுமல்ல பல்வேறு சைவம் மற்றும் தாவர வகைகளை சார்ந்த உணவுகளிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன

By Muthu Vinayagam Kosalairaman
Aug 27, 2023

Hindustan Times
Tamil

இதய ஆரோக்கியம், மூளை ஆரோக்கியம், அழற்சி எதிரான செயல்பாடு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது ஒமேகா 3 அமிலங்கள்

ஒமேகா 5 கொழுப்பு அமலிங்கள் நிறைந்திருக்கும் தாவர வகை உணவுகளை பார்க்கலாம்

சியா விதைகள்

சியா விதைகள் ஏஎல்ஏ ஓமேகா 3 கொழுப்பு அமிலம் சத்துக்களுக்கான சிறந்த ஆதாரமாக திகழ்கிறது. இதில்  இடம்பிடித்திருக்கும் நார்ச்சத்துகள், புரதம் எடை குறைப்புக்கு வழிவகுக்கின்றன

வால்நட்

அதிகப்படியான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்ததாக வால்நட் உள்ளது. இதில் இடம்பிடித்திருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மூளை மற்றும் இதய ஆரோக்கியத்துக்கு நன்மை தரும்

ஆளி விதைகள்

உடலில் ஒமேகா 3 கொழுப்பு அமில தேவையை பூர்த்தி செய்வதற்கான சிறந்த உணவாக ஆளி விதைகள் உள்ளன

பிரஸ்ஸல் முளைகள்

பிரஸ்ஸல் முளைகளில் நார்ச்சத்து, ஒமேகா கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் கே, சி போன்றவை நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது

சோயாபீன் எண்ணெய்

ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துடன் பொட்டாசியம், போலேட், வைட்டமின் பி12, கே சத்துக்கள் நிறைந்தாக உள்ளது சோயாபீன் எண்ணெய்

மோர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்