உலக முழுவதும் மிகப் பெரிய அளவில் தீவு நாடுகள் ஏராளமாக உள்ளன. அவற்றின் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jun 15, 2023
Hindustan Times Tamil
கிரீன்லாந்து
--------------------------------------------------------------
உலகின் மிகப் பெரிய தீவு நாடாக கிரீன்லாந்து உள்ளது. பிரமிக்கவைக்கும் நிலபரப்புகள் குளிர் காலத்தில் பனிபோர்த்தப்பட்டு காணப்படும். அதே போல் கோடை காலத்தில் அழகான பூக்கள் பூத்து குலுங்கி, பசுமையான தாவரங்களால் பசுமையாக காட்சியளிக்கும்
பப்புவா நியூ கினி
-----------------------------------------------------------
உலகின் இரண்டாவது பெரிய தீவு நாடாக இருக்கும் இங்கு அழகான கடற்கரைகள், அடர்ந்த காடுகள், பலதரப்பட்ட கலாச்சாரங்கள் கொண்ட நாடாக உள்ளது
மடகஸ்கர்
------------------------------------------------------------------
ஆப்பரிக்கா கண்டத்தை ஒட்டி அமைந்திருக்கும் இங்கு பசுமையான வனங்கள், பாலைவன சமவெளிகள், ஆறுகள், வலிமையான பாறைகள் கொண்ட மலைகள், பீடபூமிகள் என பல்வேறு இயற்கை அம்சங்கள் நிறைந்துள்ளன
பிலிப்பைன்ஸ் -
---------------------------------------------------------------------
செழுமையான வரலாறு, கலச்சாரத்தை கொண்ட தீவு நாடாக உள்ளது. இங்கு பிரமிக்கவைக்கும் கடற்கரைகள், நீர்விழ்ச்சிகள், பெரிய மலைகள் போன்றவை கண்களுக்கு விருந்தாக இருக்கும். எரிமலைகள் அதிகம் சீற்றம் கொள்ளும் பகுதியாகவும் உள்ளது
ஜப்பான்
-----------------------------------------------------------
சூரியன் உதயமாகும் நிலப்பரப்பு என்று அழைக்கப்படும் ஜப்பான் பலதரப்பட்ட கலாச்சாரங்களை கொண்ட மிகப் பெரிய தீவு நாடாக உள்ளது. ஜப்பானில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவு கூட்டங்கள் உள்ளன
நியூசிலாந்து
---------------------------------------------------------------
ஏராளமான சிறிய அளவிலான வசீகரிக்கு தீவுகளை கொண்டிருக்கும் தீவு நாடாக இருக்கும் நியூசிலாந்து சிறந்த கோடை கால சுற்றுலாதலமாக உள்ளது. இங்கு பெரிய மலைகள், ஏரிகள், ஆறுகள், வனங்கள், கடற்கரைகள் போன்றவை சாகச அனுபவத்தை தரும்
பிரிட்டன்
---------------------------------------------------------
உலகின் பெரும் பகுதியை ஆண்ட பிரிட்டன் தீவு நாடாக இருப்பதுடன் அங்கிருக்கும் தேவாலயங்கள், அரண்மனைகள், விசித்திரமான கிராமங்களுக்கு புகழ் பெற்றவையாக உள்ளது
க்யூபா
---------------------------------------------------------------
புரட்சி நாடான க்யூபா கரீபியன் தீவுகளில் ஒன்றாக இருப்பதுடன் சுற்றுலா பயணிகள் சுற்ற பார்க்க சிறந்த இடமாக உள்ளது. கடற்கரை, ஸ்பெயின் காலணி ஆதிக்கத்தை சேர்ந்த கட்டடகலை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது
ஐஸ்லாந்து
---------------------------------------------------------------------------
தீவு நாடான இது ஐஸ் மற்றும் நெருப்பு என இரண்டு கலந்த நாடாக உள்ளது. இதற்கு காரணமாக அங்கிருக்கும் பனிப்பாறைகளும், எரிமலை வெடிப்புகளும் உள்ளன. இதுதவிர பழமையான ஏரிகள், அழகான நீர்வீழ்ச்சிகளும் ஏராளமாக உள்ளன
இலங்கை
----------------------------------------------------------
இந்தியாவின் அண்டை நாடாக இருக்கும் இலங்கை சுற்றுச்சூழல் சுற்றுலாவுக்கு உகந்த இடமாக உள்ளது. வெப்பமண்டல தீவு பகுதியாக இருக்கும் இங்கு தனித்துவமான பாரம்பரியமும், பலதரப்பட்ட கலாச்சாரமும் நிறைந்துள்ளது