மது அருந்தும்போது முற்றிலுமாக தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்று தெரிந்துகொள்வோம்
By Karthikeyan S
Nov 19, 2024
Hindustan Times
Tamil
மது அருந்தும்போது ஆரோக்கியமான சைடிஸ்களை எடுத்துக்கொள்வது மதுவால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளை கொஞ்சம் குறைக்கு உதவும்
மது அருந்தும்போது பிரெஞ்சு ப்ரைஸ் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் அதிகளவு சோடியம் உள்ளது.
மது அருந்திவிட்டு கீரை வகைகளை சாப்பிடக் கூடாது. அதிலும் குறிப்பாக அகத்தி கீரை சாப்பிடவே கூடாது.
கார்ப்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு பானங்கள், சிப்ஸ்கள் போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பது நல்லது
அதிகப்படியான உப்பு கலந்து உணவுகளை மது அருந்தும்போது சைடிஸ்களாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
சாக்லேட்டில் உள்ள காஃபின் மற்றும் கோகோ போன்றவை பிற அமில உணவுகளால் தூண்டப்பட்டு இரைப்பை குடல் பிரச்னையை உண்டாக்கும். எனவே சாக்லேட்டை தவிர்ப்பது நல்லது.
ஆல்கஹாலுடன் சேர்ந்து காரமான உணவை எடுத்துக் கொள்வது உங்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவே காரமான சாஸ் வகைகளை தவிர்ப்பது நல்லது.
தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரை ஏன் குடிக்க வேண்டும் பாருங்க!
க்ளிக் செய்யவும்