"திரைப்படங்களில் நடிக்கப் போகிறேன் என்று அவர் சொன்னவுடன், அவருக்கு நான் பல கண்டிஷன்களை போட்டேன். ஆனால் எந்த கண்டிஷனையும் அவர் பின்பற்றவில்லை. நான் அதுவரை வேறு பெண்ணுடன் அவர் நெருக்கமாக இருந்தெல்லாம் பார்த்ததில்லை. அப்போது, முதல் முறையாக அவர் டார்லிங் படத்தில் நடித்திருந்தார்.

By Kalyani Pandiyan S
May 20, 2024

Hindustan Times
Tamil

அந்த படத்தின் முதல் காட்சியை, நான் பார்க்கச் சென்று இருந்தேன். அந்த படத்தில் சில நெருக்கமான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. அதை முதல் முறை நான் பார்க்கும் பொழுது, எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால், அந்த படம் அதை மறக்கடிக்கும் வகையில், மிகவும் பொழுது போக்காக, ரசிக்கும் வகையில் இருந்தது. அதன் பின்னர் ஒரு நடிகர் என்றால், இதெல்லாம் இயல்பாக இருக்கும். 

நடிகர்களுக்கும் கல்யாணம் முடிந்து இருக்கிறது. அவர்களுக்கும் வீட்டில் மனைவி இருக்கிறார்கள். அவர்களும் என்னைப் போன்றுதானே உணர்வார்கள் என்பதை புரிந்து கொண்டேன். ஆனால் தற்போது எனக்கு அது பழகி விட்டது. ஆனாலும் சில சமயங்களில், அவரை சில நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் பார்க்கும் பொழுது, வருத்தமாகத்தான் இருக்கும். 

ஆனால், அவர் ஏற்று இருக்கும் தொழிலானது, அந்த வகையைச் சார்ந்தது. அதனால் அதற்கு நான் பழகிக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்தேன். நடிப்பிற்காக அவர் பல விஷயங்களை செய்தார்.

நேரம் பார்க்காமல் வேலைகளை செய்து கொடுத்திருக்கிறார். குறிப்பாக பாலா இயக்கிய நாச்சியார் திரைப்படத்தில், அவர் அவரின் சௌகரியமான சூழ்நிலையை விட்டு வெளியே வந்து நடித்தார்.

 அதனால் தான் அந்த படத்தில் அவரால் அப்படிப்பட்ட ஒரு நடிப்பை வெளிப்படுத்த முடிந்தது. அவர் நடிப்பிற்காக மிகவும் கடினமாக உழைக்கிறார். - இந்தியா கிளிட்ஸ்  சேனலுக்கு சைந்தவி பேட்டி! 

இரவு சாப்பாட்டுக்கு பின்னர் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்