கருப்பு பூண்டின் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகளும் அதை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Mar 28, 2024
Hindustan Times Tamil
அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் உள்ள நிலையில் பல வாரங்களுக்கு வைத்தால் மெல்லார்ட் வினையின் காரணமாக பூண்டு பழுப்பு அல்லது கருப்பு நிறமாக மாறும். இதுவே கருப்பு பூண்டு ஆகும்
வழக்கமாக இருக்கும் வெள்ளை நிற பூண்டை காட்டிலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக கருப்பு பூண்டு உள்ளது
இதய நோய், கல்லீரல் பாதுகாப்பு, மூளை ஆரோக்கியம் என பல நன்மைகள் கருப்பு பூண்டில் இருக்கின்றன
கருப்பு பூண்டில் ஆண்டிஆக்சிடன்ட் சேர்மானம் அதிகமாக இருப்பதால், செல்கள் சேதமடைவதையும், நோய் பாதிப்புகள் ஏற்படுவதையும் குறைக்கிறது
ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. கர்ப்பகால நீரிழிவு நோய் மற்றும் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கிறது
ட்ரைகிளைசரைடுகள் அளவு, எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி, எச்டிஎல் எனப்படும் நல்ல கொல்ஸ்ட்ரால் அளவை அLிகரிக்க செய்வதன் மூலம் இதய நோய் பாதிப்பை குறைக்கிறது
நினைவாற்றல் குறைவு மற்றும் மூளை நரம்பியல் நிலைமை அல்சைமர் நோய் பாதிப்புகளை தடுத்து மூளை ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கிறது
கல்லீரலுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் கருப்பு பூண்டு, காயம் காரணமாகவும், மது பானம் பருகுவதால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கிறது