’லட்சுமி கடாட்சத்தால் பணத்தை குவிப்பார்கள்!’ பூரட்டாதி நட்சத்திரத்தின் பலன்கள் இதோ!

By Kathiravan V
Apr 27, 2024

Hindustan Times
Tamil

பூரட்டாதி நட்சத்திரம் என்பது குரு பகவானின் மூன்று நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் கும்ப ராசியிலும், நான்காவது பாதம் மீன ராசியில் விழுகிறது. இதனால் இந்த நட்சத்திரத்திற்கு கால் அற்ற நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

சுகவாசிகளான பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், லட்சுமி கடாட்சம் கொண்டவர்களாக விளங்குவர். நேரத்திற்கு சாப்பிடுதல், நேரத்திற்கு தூங்குதல், அமைதியான குடும்ப வாழ்கை உள்ளிட்ட சுகங்கள் எளிதாக பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு கிடைக்கும். 

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுமை மிகுந்தவர்களாகவும், பெருந்தன்மை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு வாக்கு பலிதம் சக்தி இருக்கும். சமூகத்தில் பெரிய மனிதர்கள் தொடர்பு இவர்களுக்கு எப்போதும் இருக்கும்.

நேரத்திற்கு சாப்பிடுதல், நேரத்திற்கு தூங்குதல், அமைதியான குடும்ப வாழ்கை உள்ளிட்ட சுகங்கள் எளிதாக பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு கிடைக்கும்.

எளியவர்களுக்கு உதவுவதில் அதிக ஆர்வம் காட்டும் இவர்கள், ஆசிரியர், பயிற்சியாளர் உள்ளிட்ட பணிகளில் ஆர்வம் காட்டுவார்கள்.

மனுஷ கணம் பொருந்தியதாக உள்ள பூரட்டாதி நட்சத்திரம், சத்வ குணங்களும், ரஜோதாமஸ குணங்களும் கலந்து இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள திருவாணேஸ்வரர் கோயிலில் சென்று வழிபாடு நடத்த சிறப்புக்கள் கூடும். ஆனாலும் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள சிவாலயத்தில் சிவபெருமானை வழிபாடு செய்தால் நன்மைகள் கிடைக்கும்.

உருளைக்கிழங்கின் நன்மைகள்