வாழ்க்கையை நடத்த உதவும் சாணக்கியர் கூறும் அறிவுரைகள்
By Marimuthu M Oct 05, 2024
Hindustan Times Tamil
முதுகுக்குப் பின் பேசக் கூடிய நபர்களிடம் இருந்து சற்று விலகி இருங்கள். இவர்களால் உங்களுக்கு ஏமாற்றம் கிடைக்க வாய்ப்பு அதிகம்.
உங்களின் நண்பர்கள், நம்பிக்கைக்கு உரியவர்களிடம்கூட உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்து
கொள்ள வேண்டாம். எப்போது வேண்டும் என்றாலும் அது எதிராகத் திரும்பலாம்
எந்தவொரு பிரச்னை வந்தாலும் உண்மையின் பக்கம் நிற்கவும். அதில் நெருக்கடிகள் வந்தாலும் பிற்காலத்தில் தீர்க்கமான வெற்றி கிட்டும்
சாணக்கிய நீதிப்படி, மற்றவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்து பலருக்கு பொறாமை இருக்கும். அத்தகையவர்களிடம் எந்தவொரு விஷயம் நடந்து வெற்றிபெறுவதற்கு முன்பும் கூறக்கூடாது
மனிதரின் பேச்சு சந்தர்ப்பத்திற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். ஒருவரின் நேர்மறை மற்றும் எதிர்மறை பண்புகளைப் புரிந்து பேசுவது வெற்றிபெற உதவும்.
எவ்வளவு நெருக்கமான நண்பர்களிடத்திலும் சில சுயநலம் இருக்கும். எனவே, கொஞ்சம் இடைவெளியினைக் கடைப்பிடியுங்கள்
.நம் வீட்டிற்கு விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும்போதோ, சொத்துக்கள் வாங்கும்போதோ, அதை யாரிடமும் சொல்லக் கூடாது