Capsicum Benefits:  மிஸ்பண்ணிடாதீங்க.. குடைமிளகாயில்  எத்தனை நன்மைகள் இருக்கு  தெரியுமா? 

Pexels

By Pandeeswari Gurusamy
Mar 31, 2024

Hindustan Times
Tamil

குடைமிளகாய் என்றதும் நம் நினைவுக்கு வருவது சைனீஸ் வகை உணவுகள் தான். குறிப்பாக பிரைடு ரைஸ், நூடுல்ஸ், மஞ்சூரியன், சில்லி பிரைடு உணவு வகைகளில் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கும் குடை மிளகாய், ஹோட்டல்களில் பல வகை உணவை அழகுபடுத்த பயன்படுகின்றன.

pixa bay

காரம் அதிகமில்லாத இம்மிளகாய், மிளகாயின் மணமும், மிளகிற்கு நிகரான சுவையும் உடையது. ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான சத்துணவு சாப்பிட விரும்புபவர்கள் குடைமிளகாயை தவறாமல் சேர்த்துக்கொள்வது நல்லது. இந்த குடைமிளகாயில் அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அது உங்களுக்கு தெரியுமா? ஆம், குடைமிளகாயில் வைட்டமின் ஏ,பி, சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. குடைமிளகாயால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன என்று இங்கு பார்க்கலாம்.

Pexels

காரம் அதிகமில்லாத இம்மிளகாய், மிளகாயின் மணமும், மிளகிற்கு நிகரான சுவையும் உடையது. ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான சத்துணவு சாப்பிட விரும்புபவர்கள் குடைமிளகாயை தவறாமல் சேர்த்துக்கொள்வது நல்லது.

Pexels

இந்த குடைமிளகாயில் அதிகளவில் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அது உங்களுக்கு தெரியுமா? ஆம், குடைமிளகாயில் வைட்டமின் ஏ,பி, சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. குடைமிளகாயால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன என்று இங்கு பார்க்கலாம்.

Pexels

உடலில் உள்ள செல்கள் சேதமடையாமல் தடுப்பதில் ஆன்டி ஆக்சிடென்டுகளின் பங்களிப்பு முக்கியமானவை. குடைமிளகாயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் செல்கள் சேதமடைவதை தடுத்து நிறுத்தும் செயல்முறையை துரிதப்படுத்த உதவும். குடைமிளகாயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் சிலவகை புற்றுநோய்களில் இருந்தும் பாதுகாக்கும் தன்மை கொண்டது.

Pexels

குடைமிளகாயில் அழற்சி எதிர்ப்பு தன்மை இருப்பதால் உடல் வலியை போக்கும் குணம் கொண்டது. குடைமிளகாயில் உள்ள வைட்டமின் கே எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்பு இணைப்புகளில், மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும், வலியையும் குறைக்கிறது. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் பல்வேறு விதமான வலிகளுக்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Pexels

குடைமிளகாயில் லுடீன் மற்றும் ஜியாசாந்தைன் ஆகிய இரண்டு கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன. அவை விழித்திரையை பாதுகாக்கக்கூடியவை. கண்களின் பார்வைத்திறனையும் மேம்படுத்தும் தன்மை கொண்டவை.

Pexels

குடைமிளகாயில் உள்ள சத்துக்கள் தலை முடியின் வேரை வலிமையாக்கி, தலை முடியை ஆரோக்கியமாக வைக்கிறது. மேலும் இது முடி உதிர்தலையும் தடுக்கிறது. முடி வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த குடைமிளகாய் பயன்படுகிறது.

Pexels

சப்போட்டா நன்மைகள்