மகரம் ராசியை விட்டு விலகும் ஏழரை சனி! கொட்டும் பணத்தை பிடிக்க ரெடியா? காத்து இருக்கும் சக்ரவர்த்தி வாழ்கை!

By Kathiravan V
Oct 09, 2024

Hindustan Times
Tamil

பல விதமான தொழில்களுக்கு காரக கிரகமான சனி பகவான் நீதி தவறாத பண்பு உடையவர் ஆவார். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வரை வாசம் செய்யும் சனி பகவான் அந்த ராசிக்காரருக்கு மிகப்பெரிய வாழ்கை அனுபவத்தை வழங்க கூடிய கிரகமாக உள்ளார்.

அடுத்து வர உள்ள 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று, சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இதன் மூலம் மகரம் ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த ஏழரை சனி பாதிப்புகள் முழுமையாக நிறைவடைகின்றது. கும்பம் ராசிக்கு பாத சனியும், மீனம் ராசிக்கு ஜென்மசனியும், மேஷம் ராசிக்கு விரைய சனியும் தொடங்க உள்ளது.

மகரம் ராசியை விட்டு சனி பகவான் முழுமையாக விலக போகிறார். உங்களுடைய ராசிநாதன் ஆக உள்ள சனி பகவான் ஆனவர். கொடுமை, பிரச்சனை, வேதனை, கஷ்டங்களை கொடுத்து உங்களை பெரிய அனுபவசாலி ஆக மாற்றி உள்ளார். இனி வரும் சவால்களை எதிர்கொண்டு வெற்றிகளை குவிப்பீர்கள். 

சனி பகவான் ஆனவர் உங்களுக்கு 2ஆம் இடமான கும்பத்தில் இருந்து மூன்றாம் இடமான மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவானுடைய பார்வை  ஐந்தாம் இடம் ஆன சுக்கிர பகவான் வீட்டில் விழுகிறது. இது மிக நல்ல யோகத்தை உண்டாகும். 

ஐந்தாம் இடம் என்பது அறிவு, திறமை, உயர்வு ஆகியவற்றை குறிக்கின்றது. இதனால் உங்கள் திறமைகள் வெளிப்படும். உங்கள் அறிவையும், புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி வாய்ப்புகளை பெற்று வெற்றி அடைவீர்கள். விடா முயற்சியுடன் செயல்பட்டு காரியங்களில் ஆதாயம் பார்ப்பீர்கள். 

கடந்த கால மன வருத்தங்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். கடந்த கால அனுபவங்களை கொண்டு கவனமாக செயல்படுவீர்கள். உங்களுடைய நிலை மாறும், தரம், தகுதி, அந்தஸ்து உயரும். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தை சனி பகவான் பார்க்கிறார். இதனால் நினைத்தது எல்லாமே தானாக நடக்கும். புதிய தொழில் செழிக்கும். தொழிலில் லாபமும் அனுகூலமும் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த தொழில் மற்றும் வியாபாரங்களை செய்வீர்கள். தொழில் மற்றும் பணியில் பணவரவு கிடக்கும். லாபம் பெருகி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 

ஹேர் ஸ்பிரே அடிப்பது ஆபத்தா?