வயாக்ரா உலகளவில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட பாலியல் உறவை மேம்படுத்தும் மருந்துகளில் ஒன்றாகும்.
ஆரோக்கியமாக இருப்பவர்களும், திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருப்பவர்களும் கூட வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆவல் இருக்கும்.
வயாக்ரா முதன்முதலில் இதய நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது.
இந்த மருந்துகள் ஆண்குறிக்கு ரத்தம் செல்வதில் குறையுள்ள நோய்கள் உள்ளவர்கள், சுழற்சி GMP என்சைம் பிரச்சனை உள்ளவர்கள், இதய நோய் இல்லாத நடுத்தர வயதினர், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஆண்களில் ஆண்குறியின் கடினத்தன்மை என்பது ஆண்குறியில் இருக்கும் சுழற்சி GMP நொதியை சார்ந்துள்ளது.
பிரபல மருந்து வயாக்ரா, ஆண்குறியில் சுழற்சி GMP நொதியை நீண்ட நேரம் வைத்திருக்கும் ரசாயனமான பாஸ்போடிஸ்டேரேஸ்-5க்கு எதிராக செயல்படுகிறது.
வயாக்ரா பயன்படுத்துபவர்கள் திடீர் மரணம், பார்வைக் கோளாறுகள், இதயத்திற்கு ரத்தம் சப்ளை இல்லாமை, தொண்டை புண், மலக்குடல் இரத்தப்போக்கு மற்றும் தலைச்சுற்றல் கடுமையான தலைவலி போன்றவற்றை அனுபவிக்கலாம்.
ஆண் குறி விறைப்புச் செயலிழப்பை சரி செய்தல் மற்றும் நீண்ட நேர பயன்பாட்டிற்கு வழிவகுக்கலாம், இது தொடர் பழக்கத்தை உருவாக்கவும் வாய்ப்பு உள்ளது. மருத்துவரின் ஆலோசனையின்றி இந்த மருந்துகளைப் பயன்படுத்துவது உயிருக்கு ஆபத்தானது.