தேங்காய் சட்னி செய்வது மிகவும் எளிது, ஈசியா செய்யும் முறை இதோ!
freepik
By Pandeeswari Gurusamy
Sep 11, 2024
Hindustan Times
Tamil
தோசை, இட்லி போன்ற டிபன்கள் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இந்த தேங்காய் சட்னியை எப்படி செய்வது என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
freepik
தேவையானவை: தேங்காய்த் துருவல்- 1 கப், பச்சை (காய்ந்த) மிளகாய் - 1, இஞ்சி - சிறு துண்டு, புளி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
freepik
தாளிக்க தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பூண்டு - 2 (தேவைப்பட்டால்) கடுகு - 1 ஸ்பூன், கறிவேப்பிலை - 7 முதல் 8 இலைகள்.
freepik
துருவிய தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி, புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
freepik
சட்னி தயார்: தேங்காய் எண்ணெயை சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவும். இந்த கலவையை அரைத்த சட்னியில் சேர்க்கவும்.
freepik
இந்த கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும், அவ்வளவு தான் சுவையான தேங்காய் சட்னி சுவைக்கு தயார்.
freepik
இப்போது இந்த சட்னியை இட்லி, தோசை, உப்புமா போன்ற உணவுகளுடன் பரிமாறவும்.
freepik
டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள்
க்ளிக் செய்யவும்