தினமும் மோர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
Pexels
By Pandeeswari Gurusamy Mar 25, 2024
Hindustan Times Tamil
புளிக்கவைக்கப்பட்ட பால் பொருட்களிலே மோர்தான் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. பாலை தயிராக்கி, தயிரை கடைந்து மோராக்கி, அதில் இருந்து வெண்ணெயை பிரித்து எடுத்து பயன்படுத்தப்படுகிறது. மோர் பருகுவதற்கு பல காலச்சாரங்களில் பல காலமாக இருந்து வருகிறது.
Pexels
இது புளிப்பு துவர்ப்பு, உப்பு கலந்த சுவையில் இருக்கும். சுவையுடன் ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்தது. செரிமானம் முதல் எலும்பு ஆரோக்கியம் வரை மோரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது.
Pexels
மோரின் முக்கிய நன்மைகளுள் ஒன்று செரிமானத்துக்கு உதவுவது. மோரில் உள்ள லாக்டோபேசிலஸ் அசிடோஃபிலஸ் மற்றும் லாக்டோபேசிலஸ் பல்கேரிகஸ் ஆகிய ப்ரோபயோடிக்குகள், குடல் நுண்ணுயிர்களை பராமரிப்பதில் உதவுகின்றன.
pixa bay
இந்த உடலுக்கு நன்மை அளிக்கும் பாக்டீரியாக்கள், உணவை உடைத்து, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும், உடலுக்கு ஊறுவிளைவிக்கும் நுண்ணுயிர்களை தடுக்கவும் உதவுகிறது. ஒரு டம்ளர் மோர் பருகுவது, அஜீரணம், வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கலை போக்குகிறது.
pixa bay
கால்சியம் மற்றும் வைட்டமின் டி, வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்பை உருவாக்க சிறந்தது. இதில் உள்ள கால்சிய சத்துக்கள், எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது, ஆஸ்டியோபொரோசிஸ் போன்ற நிலைகளை தடுக்க உதவுகிறது. வைட்டமின் டி கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது. உங்கள் உடல் இந்த மினரலை முறையாக உபயோகிக்க உதவுகிறது. மோர் பருகுவது, உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதனுடனும் சரிவிகித உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Pexels
Enter text Here
Pexels
உடல் எடையை சரியாக பராமரிக்க விரும்புபவர்கள், மோரை பருகுவதால், அவர்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுப்பதுடன், வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கிறது. இதில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவு என்பதால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். பசியைக் கட்டுப்படுத்தும். மேரில் உள்ள புரதச்சத்துக்கள் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுத்து, அதிகம் சாப்பிடுவதை தடுக்கிறது.
Pexels
உள் உறுப்புக்களின் ஆராக்கியத்துக்கு மட்டும் மோர் நன்மை கொடுக்கவில்லை. உங்கள் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மோரில் உள்ள லாக்டிக் அமிலம், இயற்கை குணங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, மிருதுவாக்குகிறது. முகப்பருக்களை குறைக்க உதவுகிறது. சருமத்துக்கு இயற்கை பளபளப்பைக் கொடுக்கிறது. வெயிலால் ஏற்படும் சரும வறட்சியைப்போக்க மோரை சிலர் பயன்படுத்துவார்கள்.
Pexels
உங்கள் உடலில் இதய ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசிய சத்துக்கள் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இது சோடியத்துக்கு எதிராக வினைபுரிகிறது. இதில் உள்ள ப்ரோபயோடிக்குகள் உடலில் கொழுப்பு அளவை கட்டுப்படுத்துகின்றன. இதனால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.